பக்கம்:தாய்மை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தாய்மை

விகாண்ட நாளே’, தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே” என்று பல படி ய்ாக இ ைற வ ன் திருவாரூரில் கோயில் கொண்ட தொன்மை நிலையினையும், அதன் வழிச் சமயத்தின் தொன்மையினையும் அப்பரடிகள் விளக்கிக் காட்டியுள்ளார். அத்தகைய தொன்மை வாய்ந்த சமயத்துக்குத் திட்டமான வரலாறு எப்படி இருக்க முடியும்? வர்லாறு இல்லை எனக் குறைபடுகிறார் அந்த அறிஞர். சில சமயங்கள் காலத்தால் மிகவும் பிற்பட்டுத் தோன்றிய காரணத்தாலே அவற்றிற்கு ஆதியும் அந்தமும் அறியும் வரலாறு இருக்கலாம். ஆனால் மனித அறிவுக்கு எட்டாத அந்த நெடுங்காலத்துக்கு முன் உண்டான சமயத்துக்குத் தொன்மை வரலாறு என எதைக் காட்ட இயலும்? மனித வரலாற்றின் தொடக்க எல்லை காண இன்றும் முடியவில்லை. அதனால் அந்த மனிதன் வரலாறு அற்றவன், தாழ்ந்தவன் என்று யாராவது சொல்ல. முடியுமா? கண்ணால் காணும் கல்லுக்கும் கடலுக்கும் வரலாறு திட்டமுடியாத மனிதனின் வரலாற்று எல்லையில் எப்படிக் காலங்கடந்த சமய வரலாறுகளைக் கண்டு நிற்க முடியும்? அப்படிமுடியின் அது எப்படிச்சமயமாகும்? அப்படி ஒரு குறித்த எல்லைக்குள் வளர்ந்த சமயங்களுக்கு ஓரிரு வழி காட்டிகளோ, போதகர்களோ தோன்றியிருக்க அவர்களை இவர்கள் எங்கள் ஒளி விளக்கு எனப் பிற சமயத்தவர் அறுதியிட முடியும். ஆனால் காலமும் கணக்கும் நீத்த. பெரும் சமயத்தே எத்தனை எத்தனையோ பெரிய வர்கள் தோன்றி நல்லுபதேச மொழிகளைக் காட்டி உயிர் விளக்கம் செய்திருப்பார்களன்றோ! எனவேதான் இந்தச் சமயத்தில் பல சமயாச்சாரியார்களும், குரு நிலையில் போற்றக்கூடிய தலைவர்களும் பலப்பலராக அவர்கள்’ எழுதிய நூல்களும் எண்ணற்றுப் பெருகியுள்ளன. ஆயினும் அவற்றின் முடிவெல்லாம் எல்லையற்ற இறைவன் தன்மையைச் சுட்டிக் காட்டுவதிலேயே அமையும் என்பதை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/74&oldid=684873" இலிருந்து மீள்விக்கப்பட்டது