பக்கம்:தாய்மை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையான மெய்ச்சமயம் 73

உணரவேண்டும். கண்ணும் கருத்தும் வேண்டும் கண்டு. உணர்வதற்கு. -

தீபாவளிக் கதைபற்றிக் குறிப்பிட்டு அதற்கு மூல. காரணத்தையும் க ைத ைய யும் ப ற் றி ஒருமித்த கருத்தில்லையே எனக் குறைபட்ட நிலையையும் கண்டேன். தொன்மை என்ற அடிப்படையின் மேலே கண்டபடி காலத்

தால் பலப்பல கதைகளும் பிறவும் தோன்றலாம். ஆனால் w

இருள் நீக்கி ஒளி காட்டும் விழா அது என்பதாகிய அடிப் படையை உணர வேண்டும். மன இருள் நீங்கி அறிவொளி, புற இருள் நீங்கி விளக்கொளி, உலகிருள் நீங்கிக் கதிர் ஒளி என அகமும் புறமும் உலகும் உயிரும் தொல்லை தரும் இருள் நீக்கம் பெற்று உள்ளொளியும் புறவொளியும் உற்று வாழ்வதாகிய தெய்வ நெறியை அ ல் ல வ ா இது காட்டுகிறது. மேலும் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் நடைபெறும் இவ்விழாக்களும் இவற்றின் ஒளி ஒலி நிகழ்ச்சி. களும் தெய்வ நெறி மட்டுமன்றிச் சமுதாய நெறியையும் காட்டுகிறபடி உள்ளன என உணரவேண்டும். நம் சமய விழாக்கள் அ ைன த் து மே சமுதாய வாழ்வின் அடிப்படையில் எல்லோரும் வாழ வேண்டும்” என்ற, உணர்வில் அமைவதேயாகும். மனித்னுக்கும் அவனைச் சார்ந்த பிற உயிர்களுக்கும் . ஏன்? . பயிர்களுக்கும்கூட ஊறு விளைக்கும் கோடி கோடியான பூச்சிகள் உருவாகும் காலம் இம்மழைக்காலம். அவற்றால் சமுதாயமோ அதன் குழலோ தாக்கப்படுவதைத் தடுக்கவே வீட்டிலும் நாட்டிலும் இவ்விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஐப்பசியில் தீபாவளியும் கார்த்திகையில் விளக்கீட்டு: விழாவும் (சம்பந்தர் வாக்கு - கார்த்திகை விளக்கீடு) ஏன் வருகின்றன? அக்காலத்தில் அ த் த ைன விளக்கு ஏற்றுவானேன்? வெடி, மத்தாப்பு ஆகியவற்றை கொளுத்துவானேன்? அறிவியல் அதற்குப் பதில் சொல்லும். ஒலியாலும் ஒளியாலும் சமுதாயத்துக்கு ஊறு செய்யும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/75&oldid=684875" இலிருந்து மீள்விக்கப்பட்டது