பக்கம்:தாய்மை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமையான மெய்ச்சமயம் 79

அனைத்தும் உருவம், அல்லது அருவம் என்ற வகையிலேயே வழிபாடு ஆற்றுகின்றன. நம் சமயம் அந்த இரண்டினை மட்டுமன்றி அதற்கு அப்பாலும் சென்று அருவுருவ வழி: பாட்டினைச் செய்கிறது. இவ்வாறு பலவகையில் போற்றும் போது பல பெயர்கள் அமைவது இயற்கை. இறைவனைக் ‘காட்ட முடியுமோ? என்ற வினாவுக்கு, . . “ அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்

அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இங்கிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொணாதே’ என்று அப்பரடிகள் பதில் கூறியுள்ளார். அவர் ஒவியத்து எழுதவோண்ணா உருவன்-நிறம்ற்றவன்-பெயரிலி. எனினும் பலர் பலவகையில் கண்டு பல பெயர் இடுகிறார். களே-அதற்கு ஒரு காரணம் அவரவர் மனஉணர்வே என்று முன்னரே கண்டோம். அப்பரடிகள் அதற்கும். மேலே ஒருபடி, சென்று, அந்த உருவாய் எண்ணி அப்படிக் காண்பதற்கும் அவன் அருளே காரணமாய் நின்று தூண்டி விடுகிறது என்கிறார். இதனினும் உயர்ந்த மெச்சமய நெறி உண்டோ!

இ ைற வ ன் பெயரற்றவன் என்றும் அடியவர். ஆயிரமாயிரம் பெயர்கள் சொல்லி அழைக்க அஞ்ச வென ஓடிவந்து அருள் செய்வான் என்றும் மணிவாசகர்.

ஒரு காமம் ஒருருவம் ஒன்று மிலார்க்கு ஆயிரம் திருகாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ? எனத் திருத்தெள்ளேனத்தில் விளக்கம் தந்துள்ளார். .

இப்படியே உயிர்கள் பொருட்டு இறைவன் இரங்கி - வந்து உலகில் அவதாரம் செய்வது பற்றிய மரபு வழி வரலாறுகளும் எண்ணத்தக்கன. இத்தகைய கதைகள் பிற. சமயங்களிலும் உள்ளன. எ ன வே அவதாரங்களை இழிப்பது அவரவர் சமயங்களையே பழிப்பதாகும். இவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/81&oldid=684887" இலிருந்து மீள்விக்கப்பட்டது