பக்கம்:தாய்மை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தாய்மை

நிறைந்து அவற்றின் எல்லைகளை எல்லாம் கடந்து நின்ற அந்த இறைவன், அடியவர் பொருட்டாக அன்பின் வலையில் கட்டுண்டு, அவரவர் விரும்பும் வடிவில்வகையில் தோன்றுவான் என்பதே சமய உண்மை. இந்த உண்மைதான் மெய்ச் சமய விளக்கமாகும். அதனாலேயே இச் சமயத்தில் எண்ணற்ற வழிபாட்டு முறைகளும் தெய்வப் பெயர்களும், விழாக்களும், கொள்கைகளும் பிறவும் மலிந்துள்ளன என்பதை அறிதல் வேண்டும். ஆனால் யாரும் தாம் வழிபடுகின்ற அந்த ஒன்றிலேதான் இறைவன் இருக்கின்றான். என்று எண்ணுவதில்லை எங்கும் நிறைகின்ற இறைவனை நான் இப்படி வழிபடுகிறேன்” என்றே எண்ணுவர். இத்த உண்மையை உணரின் நம் மெய்ச்சமயநிலை விளங்கும். இந்த உண்மையினையும் தொல்லையில் ஒன்றி ன இறைவன்-மறைகளாலும் சுட்டிக் காட்டமுடியாத இறைவன் எப்படிச் சமயந்தோறும் பரந்து நிறைந்து சிறந்துள்ளான் என்பதையும் கம்பர் ஆற்றின் மேல்வைத்து அழகாகக் காட்டுவதையும் இங்கே நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இதோ அவர் வாக்கு.

“கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம் எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈ

. . தென்னத் தொல்லையில் ஒன்றேயாகித் துறைதொறும் பரந்த

. சூழ்ச்சிப் பல்பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போற்பரந்த

. தன்றே ‘ (ஆற்று-19) பரஞ்சோதியாரையும் கம்பரையும் உணர்ந்தார் நம் மெய்ச் சமயநெறி பற்றிய உண்மையை நன்கு கண்டு கொள்வர். அல்லாதார்? .

உருவ வழிபாட்டைப் பற்றியும் எண்ணவேண்டும். நம் சமயம் உருவ வழிபாட்டை மட்டும் வற்புறுத்துகின்றது என அறிந்தவர் சொல்ல மாட்டார்கள். உலக சமயங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/80&oldid=684885" இலிருந்து மீள்விக்கப்பட்டது