பக்கம்:தாய்மை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பக்தி இயக்கம்

இறை உணர்வும் அவனை ஏத்தும் மரபும் காலத்தால், மிகமிக முற்பட்டனவாகும். -

புகையெட்டும் போக்கெட்டும் புலன்களெட்டும்

பூதலங்கள் அவையெட்டும் பொழில்கள் எட்டும் கலை யெட்டும் காப்பெட்டும் காட்சி எட்டும்

கழற் சேவடி அடைந்தார் களைகணெட்டும் நகையெட்டும் நாளெட்டும் கன்மையெட்டும்

கலஞ்சிறக்தார் மனத்தகத்து மலர்களெட்டும் திகையெட்டும் தெரிப்பதற்கும் முன்னோ பின்னோ

திருவாரூரே கோயிலாக் கொண்ட நாளே “ என்ற நாவுக்கரசர்தம் திருத்தாண்டகம் சற்றே உயர்வு. நவிற்சியாகக் காணப்படினும், இறை உணர்வும் பக்தி இயக்கமும் மிகமிகப் பழங்காலத்திலேயே மனிதன் தன் உணர்வு பெற்ற அந்த நாளிலேயே அரும்பிவிட்டது. எனலாம். பக்தி என்பது தம்மினும் மிக்காரிடம் காட்டும் ஒர் உணர்வு . பாசம் அல்லது பற்று. உலகம் இறைவன் முன் விண்ணப்பம் வைத்து வேண்டுதலையே பக்தி என்கின்றது. வாழ்கின்ற சமயங்களெல்லம் இப் பக்தி அடிப்படையில்தான் வாழ்கின்றன. வாழ்வில் முன்னேற மறுமை நலம் பெற முழு நம்பிக்கை, பற்று, அன்பு இவை கலந்த பக்தியையே பற்றிக் கொள்கின்றன. (Encyclo 14 th En. Vol. 19. P. 108.) . . . - பக்தியும் அதன் அடிப்படையில் முகிழ்த்த சமயமும், எண்ணத்தில்-உறுதி உளத்தில் . உணர்வில் - சொல்லில் . செயலில் அமைந்த, மனிதனுடைய தெய்வநெறி, உலக நெறி, உற்ற சமுதாய நெறி என்றவற்றில் அடங்குவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/83&oldid=684890" இலிருந்து மீள்விக்கப்பட்டது