பக்கம்:தாய்மை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 - தாங்கை

argub. (The essential of Religion P. 67 - by T. wilson Heuper) இப் பக்தியும் சமயநெறியும் குறுநில அல்லது திணை அடிப்படையில் அரும்பி, நாட்டு நலமாக மலர்ந்து, உலக உணர்வாக காய்த்துக் கணிகின்ற ஒன்றாகும், தென்னாடுடைய சிவனே போற்றி, எந் நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற திருவாசகம் உலக சமய வழிகாட்டி அல்லவா!

இன்று நாம் காண்கின்ற வகைக்கு முற்றும் மாறு பட்டதாய். ஏன்? முரணியதாய்க்கூட அந்தத் தொடக்க நாளில் பக்தி மனித உள்ளத்தில் தோன்றியிருக்கும். ஆறறிவுடைய மனிதன் - தோன்றிய அந்த நாளிலே மனம் போன போக்கிலே வார்ந்தவன்: வரையறுத்த சமுதாய வாழ்வு அவன் அறியாதது. கண்டதைத் தின்று கண்டபடி திரிந்து, காட்டில் உறைந்து எப்படியோ இனப் பெருக் கத்தை மட்டும் அ றி ந் து வ ள ர் ந்து வந்தவன் என்பது வரலாறு காட்டும் உண்மை. அவன் மனம் போன போக்கில் செல்லும்போது பல அல்லல்களைச் சந்தித்திருப்பானல்லனோ! தான் கருதியது முடியாதிருந் திருக்கும். அப்போது அவன் சிந்தனை . எண்ணம்.புதிதாக அரும்பிய உணர்வு அவனுக்கு ஓர் உண்மையினை உணர்த்தி யிருக்கும். ஆம்; அந்த உணர்வே பக்தி இயக்கத்தின் வித்தாக அமைந்தது. .

தனக்கு ஊறுவிளைக்கும் தீயும் வெள்ளமும் இடியும் மழையும் பிறவும் தனக்கு மேம்பட்டன என்ற உணர்வும் அவற்றிற்கு அஞ்சியே தான் வாழ வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்குத் தோன்றியிருக்கும். அந்த அச்ச உணர்வே பக்தித்கு அடிப்படை எனலாம். அஞ்சி யாகிலும் அன்பு பட்டாகிலும், நெஞ்சம் வாழி நினை (தேவாரம் ஆேம் திருமுறை) எனத் தன் நெஞ்சத்துக்கு அப்பர் நினைவூட்டியது அந்தப்பழமையினையும் பின்வந்த அன்பு நெறியினையும் இணைந்த நிலையினைத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/84&oldid=684892" இலிருந்து மீள்விக்கப்பட்டது