பக்கம்:தாய்மை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங்க்தி இயக்கம் 85

இதற்கிடையில் வீரம் விளைத்தார்க்கும் களத்தில் இறந்தார்க்கும் நடுகல் நட்டு வழிபாடாற்றும் பக்தி வளர்ந்து வந்தது. தொல்காப்பியமும் பிற தமிழ் இலக்கண இலக்கியங்களும் இந்த நெறியினை உணர்த்து கின்றன. மேலும் தத்தம் முன்னோரை வழிபாடாற்றும் பக்தி நெறியும் பலவிடங்களில் தோன்றிற்று. இன்றும் பலர் பூவாடை போன்று முன்னோரை வழிபடும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளதை தம் நாட் டி ல் காணலாமன்றோ!

அச்சத்தொடு அமைந்த பக்தி மெல்ல மெல்ல அன்பொடு இயைந்த பக்தியாக வெகு காலத்துக்கு முன்பே மாறி வந்துள்ளது என வரலாற்று நெறி நமக்கு உணர்த்து .கி ன் றது. தமிழில் ப ைழ ய இ லக் கி ய மா கி ய தொல்காப்பியத்திலும் வடமொழியில் கீ ைத யி லு ம் இத்தகைய பக்தியும் வழிபாடும் காணக்கிடைக்கின்றன. அவ்வாறு வளர்ச்சி பெறுவதற்கு இடையில் எத்தனை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்திருக்க வேண்டும். அதற்குப் பிறகும் பழைய மரபினை ஒட்டிய பக்தி முற்றும் மறைந்துவிடாமல் ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்து உலகிடை வாழ்கின்றன என்பதும் உண்மையாகும். 7-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பரும் இதைத்தான் அஞ்சியா கிலும் அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை’ என் கிறார். பாரதயுத்தம் துவாபரயுகத்தின் கடைசிக் காலத்தில் -அதாவது இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் நடை பெற்றதென்பர். தொல்காப்பியர் காலத்தினையும் அந்த எல்லையில் சார்த்திச் சொல்லுவர். எனவே இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அன்பொடு கலந்த பக்தி உலகில் சிறக்க நின்றது என அறியவேண்டும். தொல் காப்பியத்தில் திணை நிலத் தெய்வங்களாக வேந்தன் (இந்திரன் , வருணன், மாயோன், சேயான் ஆகியோர் பேசப் பெறுகின்றனர். நிலவு வழிபாடு போன்றவையும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/87&oldid=684897" இலிருந்து மீள்விக்கப்பட்டது