பக்கம்:தாய்மை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 தாய்மை

உள்ளன. இவை மக்களினம் தனித்தனியாகப் பிரிந்து வெவ்வேறு நிலங்களில் வாழ்ந்த பழங்காலத்துப் பக்தி நிலைக்குச் சான்றாக அமைகின்றன. பாலை நிலத் தெய்வமும் உள்ளது. அவற்றிற்குப் பலியிடலும் பராவலும் பக்தியின் பாற்பட்டனவே. எனினும் அதே தொல் காப்பியத்திலே கொடிநிலை கந்தழி வள்ளி என்ற வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும், கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே என்ற சூத்திரத்தின் வழியே எல்லாச் சிறு தெய்வங்களுக்கும் மேலாக உயரிய பரம்பொருள்

உள்ள ஒரு நிலையும் உணர்த்தப்பெறுகின்றது. எனவே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மு ன் பே - ஏன் . அதற்கும்

நெடுங்காலத்துக்கு முன்பே அப்பாலுக்கப்பாலாய் நின்று யாண்டும் நீக்கமற நின்ற இறை உணர்வு அரும்பி வளர்ந்து வந்துள்ளது எனவும் அதுவும் அன்பு நெறியில் அமைந்தது எனவும் அறிய வேண்டும். இந்த உணர்வு எப்படி வளர்ந்தது?

கண்ணில் காணும் அச்சந் தருவனவற்றையும் ஆக்கம் அளிப்பனவற்றையும் வணங்கிய மனிதன் அவற்றின் வழியே தான் எண்ணியதை முடித்துக்கொள்ள முடியாத ஒரு நிலையை நெடுங்கால அனுபவத்தினால் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினான். அந்த உணர்ச்சியிலேயே இப்படிக் காணும் தெய்வங்களுக்கும் தம் எண்ணத்துக்கும் மேலாக ஏதோ ஒரு பொருள் கண்ணுக்குப் புலப்படிா வகையில் எங்கிருந்தோ எல்லாவற்றையும் ஆட்டிப்படைக் கின்றதென்பதையும், அது எங்கும் நிறைந்த ஒன்றாக . யாவையும் அறிந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்ந்தான். அந்த ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலா” இறைவனை உணரத்தொடங்கிய காலத்திலும் அதை உள்ளத்தால் அன்புடன் வழிபடுவதோடு, அதுவரையில் புறத்தே கண்டு வழிபட்டு வந்தவற்றையும் அச்சத்தால் விடாது போற்றியும் வந்தான். எனவே , இன்றுவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/88&oldid=684899" இலிருந்து மீள்விக்கப்பட்டது