பக்கம்:தாய்மை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கம் 87

இவை இரண்டும் இணைந்த பக்திமார்க்கமே இன்று உலகில்

நிலவுகிறது. -

மேலும் தொல்காப்பியம் புறத்திணை இயல் 76-ஆம் சூத்திரத்து, ஒல்லார் நாணப் பெரியர்க் கண்ணிச் சொல் லிய வகையில் ஒன்றொடு புணர்ந்து, தொல்லுயிர் வழங்கிய அவிப்பலி’ என்பது தம் உயிரையே அவிப்பலியாகக் கொடுக்கும் வீரத்தொடு கலந்த பக்தியைக் குறிப்பிடுகிறது அடுத்த காஞ்சித்திணைபற்றி வருகின்ற 79ஆம் சூத்திரத்தில் ‘கூறப்பட்ட பலதுறைகளும் விளக்கமாகப் பக்தி எனப் பேசப் பெறாவிடினும் ஒருவரோடு ஒருவர் பற்றி அ ன் பி ன் காரணமாக அமைந்த பதிபக்தி’ போன்ற வகையில் அமைந்தனவாகக் கொள்ளலாம். இக் காஞ்சித்திணையே வீடுபேறு பெறுதற்கு ஏதுவாக அமையும் நிலையினையும் இதில் கடவுள், கணவர், பெரியோர், பெற்றோர், உற்றார், பிள்ளைகள் ஆகியவரிடம் காட்டும் அன்பின் காரணமாக அமைந்த செயல்களையும் விளக்குகின்றது. இந்தத் திணையும் பிற திணைகளுள் அ ைம ந் த வெறியாட்டயர்தல் போன்ற துறைகளும் அன்று பக்தி’ எனப் பாராட்டப் பெறாவிடினும் அவையும் பக்தி இயக்க இடைக்கால வரலாற்றில் இடம் பெறவேண்டுவனவே யாம். இவையாவும் தன்னை மறந்து தன்னிலும் மேலொன்றில் மனம் வைத்த பக்திநிலையாகும்.

இவ்வாறே பகவத் கீதையிலும் போர்க்காலத்தில் அறம் உரைக்கவந்த கண்ணன், பன்னிரண்டாம் அத்தியா யத்தில் பக்தி யோகம் பற்றியே இருபது சூத்திரங்களில் விளக்கிக் கூறுகின்றான். பிற பகுதிகளைப் போன்று இதை :யோகம்’ என்று கூறினாலும் இதுவும் பக்தி இயக்கம் பற்றியதே. ஆயினும் இந்த அத்தியாயத்தில் பெரும் :பாலும் தன்னை மறந்து இறைவனை எண்ணும். நிலையே கூறப்பெறுகின்றது. அதில் வரும், விளக்கம் மனிதன்தன் செயல் அனைத்தையும் இறைவன் செயலாக எண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/89&oldid=684900" இலிருந்து மீள்விக்கப்பட்டது