பக்கம்:தாய்மை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி, இயக்கம் . 89

f

வேதகாலமாகிய ஆரியர் வட இந்தியச் சமவெளியில் வாழ்ந்த காலத்திலே அவ்வேதங்களில் வரும் உருத்திரன் போன்ற தெய்வங்களும் தமிழகத்துச் சிவனும் பின் இணைந்து பலவகையில் சைவ சமய நெறியாகிப் பின் இந்து சமயப்பேரெரியில் ஒன்றிய நிலை வரலாறு காட்டுவதாகும். அப்படியே இடையில் தோன்றிய பெளத்த, சமண சமயப் பக்தி நெறியும் இந்திய மண்ணிலே தோன்றி, பிற நாடு களில் பரவிய நிலையினையும் காண்கின்றோம். மத்திய தரைக்கடல் நாடுகளிலும் பல்லாயிர மாண்டுகளாக மாறி மாறி வந்த சமயத்தொடு வந்த பக்தி நெறி, கிறித்துவ சகாப்தத் தொடக்கத்தில் நெறிப்படுத்தப்பட்டது என்பது தெளிவு. பின் கிறித்தவமும் இஸ்லாமும் உலகெங்கும் பரவ. அவற்றின் பக்தி மார்க்கமே ஊன்று கோலாயிற்று என்பதும் தெளிவு. . . - *

எல்லாச் சமயங்களும் மனிதனுக்கும் பிற உயிர் களுக்கும் மேற்பட்ட ஒர் இறை உண்டு என்பதை வற்புறுத்தினாலும், அதை மு ன் னி று த் தித் தனக்கு வேண்டியதைக் கேட்டுப் பாடிப் பரவும் வழக்கம் அன்று இல்லை எனலாம். இராவணன், சூரபதுமன், இரணியன் போன்றோர் கடுந்தவம் புரிந்து வேண்டியன பெற்றார் களேயன்றிக் கசிந்து பாடிப் பயன் பெற்றதாக இல்லை. சாமவேதம் பாடியதாகக் கூறப்பெறினும் அதில் உருக்கம் இல்லை. எனவே இன்றைய பக்தி இயக்கத்தின் சிறந்த அம்சமாகிய பக்தி இலக்கியங்கள் அப் ப்ழங்காலத்தில் எழவில்லை என்பது கண்கூடு. வேதங்களும் கிரேக்க உரோம இலக்கியங்களும் கடவுள் தன்மையைக் காட்டி, வழிபடுமுறைகளை வி ள க்கு கி ன் ற ன ேவ ய ன் றி ங் பாட்டிசைத்துப் போற்றிய மரபினைக் காட்டவில்லை. இந்தநிலை ஏறக்குறைய நம் தமிழகச் சங்ககாலம் வரையில் நிலவியது எனக் கொள்ளலாம். சங்க காலத்திலே சிவனும் திருமாலும் முருகனும் சக்தியும் பிற சிறுதெய்வங்களும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/91&oldid=684905" இலிருந்து மீள்விக்கப்பட்டது