பக்கம்:தாய்மை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96” தாய்மை.

வீர்ர் வழிபாடும் காணப்படுகின்றன. அவையெல்லாம் பக்தியின் அடிப்பில்டயில் அமைந்தனவே. எனினும் அக்காலத்தில்ேயும் அத்தெய்வங்களைப் போற்றிப் பரவும்: பக்தி இலக்கியம் இல்லை என்பது கண்கூடு. முதல்முதலாக தமிழில் திருமுருகாற்றுப்படையே சங்ககாலப் பக்தி: இலக்கியமாக நமக்குக் கிடைக்கிறது. சங்க காலத்தை, ஒட்டி எழுந்தசிலப்பதிகாரத்திலே வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை போன்ற பகுதிகளும், மணி. மேகலையின் மாரனை வெல்லும் வீர நின்னடி” போன்றவையும் விளக்கமாகப் பக்தி இயக்கத்தைப் பாரறியச் செய்தன. அக்காலத்தில் பக்தி இயக்கம் வெறும் மந்திரங்களைச் சொல்லும் மரபுநெறி மாறிப் பொது மக்கள் இலக்கியமாக - பாட்டாக வளர்ச்சியுற்றமை, தெளிவு. அதற்குப் பின் தெளிந்த இந்திய வரலாற்றில் பக்திக் இலக்கிய வளர்ச்சி கானப் பெறுகின்றது.

இத்தகைய கடவுள் வழிபாட்டுக்கிடையிலும், அக். காலத்தில் கோயில்கள் இல்லை. திருமுருகாற்றுப் படையில் கூறிய ஊர் ஊர் கொண்ட விழாக்கள் மரங்களை அடிப் படையாகக் கொண்டு சிறந்தன. எனவே மரவழிப்ாடு பக்தி இயக்கத்தில் முக்கிய இடம் பெறுகின்றது. இது பற்றின் ஜி. சுப்பிரமணியப் பிள்ளை Tree Worship என்று ஒரு நூலே எழுதியுள்ளார். இன்றும் வேம்பும் அரசும் தெய்வ மாகப் போற்றப்படுவதைக் காண்கிறோம். மதுரை கடம் பவனமாகவும், சிதம்பரம் தில்லை வனமாகவும் பிற இடங்: கள் திருவேற்காடு, வெண்காடு, மறைக்காடு ப்ோன்றன. வாகவும் இந்த அடிப்படையில் அமைந்தனவே. கோயிலில் உள்ள மூர்த்தத்தைக் காட்டிலும் அதன் மூலமாகிய மரத்தடியினையே .ெ த ய் வ ம் நிலைபெறு இடமாகக் கண்டனர். இதனால்தான் போலு ம் சுந்தரரைத் திருவொற்றியூரில் இறைவன், சன்னிதியில் சபதம் செய்ய விட்ாது மூவாத திருமகிழ மரத்தின் கீழ்ச் சபதம் செய்யச் சொன்னார் என எண்ண வேண்டியுள்ளது. எனவே பக்தி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/92&oldid=684907" இலிருந்து மீள்விக்கப்பட்டது