பக்கம்:தாய்மை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி.இயக்கம் 9 I

இயக்கத்தில் அன்றும் இன்றும் மரவழிபாடு முக்கிய இடம் , பெறுகின்றது.

சங்க காலத்துக்குப்பின் இந்திய வரலாற்றில் - சிறப்பாகத் தமிழக வரலாற்றில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன. கி. பி. முதல் நூற்றாண்டிற்குப் பிறகு ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் .ெ த வரி ந் த தமிழகந்தைக் காண்கிறோம். இடையில் எத்தனையோ வேற்று அரசுகள், பெளத்த சமணமத ஆதிக்கங்கள், மொழி ஆதிக்கங்கள் பல நடைபெற்றுள்ளன. அக்காலத்திலேதான் பக்தி இயக்கத்திற்கு முக்கிய ஆதாரமான கோயில்கள் கட்டப்பெற்றன. கோச்செங்கணான் என்ற ஒரே சோழ மன்னன் சிவனுக்கு எழுபது கோயில்களையும் பல வைணவக் கோயில்களையும் கட்டி முடித்தான். அக் காலத்தில்தான் பக்தி இலக்கியமும் பரவலாயிற்று. காரைக் காலம்மையார், திருமூலர் போன்ற சைவ அடியார்களும் ஆண்டாள், பெரியாழ்வார் போன்ற வைணவ அடியார் களும் தோன்றி வாழ்ந்து பக்திப் பரவசத்தில் திளைத்துப் பாடல்கள் பாடினர். இவர்களைப் பக்தி இலக்கிய முன்னோடிகள் எனக்கொள்ளல் பொருந்தும். \

இதற்கிடையில் தமிழ் மொழியில் பல்வேறு வகையில் பல வகைப் பாவினங்கள் பல்கிப் பெருகின. அவற்றின் வழியே பல பாடல்களும் உருவாயின. தமிழக முழுவதும் ஏழாம் நூற்றாண்டில் சமயக் கிளர்ச்சிகள் வழியே ப்ெரு: மாற்றம் அடைந்தது. முற்றும் பரவியிருந்த சமணத்துக்கு . மாறாகச் சைவ வைணவ இலக்கியங்கள் மலர்ந்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் ஊர்தொறும் சென்று : பக்தியைப் பரப்பிப் பல்லாயிரக்கணக்கான பக்திப் பாடல் : களைப் பாடினர். சைவத் திருமுறைகளும் நாலாயிரப் பிரபந்தமும் இன்றும் பெரும் பக்தி இலக்கியங்களாகப் போற்றப் பெறுகின்றன. அவர்கள் சென்ற இடங் களெல்லாம் தெய்வத்தலங்களாகப் போற்றப் பெற்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/93&oldid=684909" இலிருந்து மீள்விக்கப்பட்டது