பக்கம்:தாய்மை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92. . 3m sticam

ஆங்காங்கே மரத்தடிகளில் இருந்த மூர்த்தங்களுக்குக் கோயில்கள் எழலாயின. பின்வந்த சோழர் காலத்தும் அதற்குமுன் இருந்த பல்லவர் காலத்தும் அமைந்த பல கோயில்கள் இன்றளவும் வாழ்கின்றன. சைவ வைணவ நெறிகளின் பக்தி இயக்கத்தின் மூலாதாரமாக இக் கோயில்களே இன்று விளங்குகின்றன. எனினும் மிகப் பழமையாகப் போற்றப்பெற்ற கிராம தேவதைகள் கோயில்களும் உடன் போ ற் ற ப் பெறுகின்றன. பிற்காலத்தில் இப்பக்தி நெறிக்கு ஆக்கம் தரும்வகையில் பெரும் தலங்களுக்கெல்லாம் தலபுராணங்கள் எழுதப் பெற்றன. அவை பெரும்பாலும் கற்பனை கலந்தனவாக அமைந்தமையின் இன்று மக்களிடை அதிக ஆதிக்கம் செலுத்தவில்லை. (எனினும் அமெரிக்கா, சிகாகோ பல்கலைக் கழகத்தே இத் தமிழ்நாட்டுத் தலபுராணங் களைப் பற்றிய ஆராய்ச்சி நடைபெறுகின்றது.) - பக்தி இயக்கம் வளர வளர அதன் இலக்கியங்களும் வனரலாயின. பின்னர்க் கோவை, உலா, பிள்ளைத்தமிழ், மாலை, அந்தாதி போன்ற பிரபந்தங்கள் ஆயிரக்கணக்கில் உண்டாயின. அவற்றுள் பெரும்பாலும் இன்றளவும் வாழ்கின்றன. சைவ வைணவ சமயப் பக்தி இலக்கியங் களைக் கண்ட இந்நாட்டில் பின்வந்து கால் கொண்ட கிறித்துவ இஸ்லாமிய சமயத்தவரும் பல்வேறு பக்தி இலக்கியங்களை எழுதினர். வடநாட்டிலும் சென்ற சில நூற்றாண்டுகளில் மீரா போன்ற பக்தர்கள் தோன்றிம் பக்தி இயக்கத்தை வளரச் செய்தனர். இராம கிருஷ்ணர் விவேகானந்தர் போன்றோர் பக்தி இயக்கத்தைச் சார்ந்த பல கருத்துக்களை உலகுக்கு உணர்த்தி வேதாந்த நெறியைப் போதித்தனர். சைவ, வைணவ, கிறித்தவ, இஸ்லாமிய நெறிகளில் உள்ள பல்வேறு பிரிவுகளும் இன்று பக்தி இயக்க அடிப்படையில் தான் வாழ்கின்றன. அத்வைதம், துவைதம், விசிட்டாத்துவைதம் போன்ற பல நெறி பற்றிய வேதாந்த சித்தாந்தக் கொள்கைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/94&oldid=684911" இலிருந்து மீள்விக்கப்பட்டது