பக்கம்:தாய்மை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தி இயக்கம் 98

இப்பக்தி இயக்க அடிப்படையில்தான் சிறக்கின்றன. அவரவர் கருத்துக்களைத் தாம் தாம் கொள்ளும் முதற் பொருள்பால் செலுத்தி அதற்கேற்பத் தோத்திரப்பாக் களும் குத்திரங்களும் இயற்றிப் பக்திநெறி நின்றே தத்தம் கொள்கைகளை இன்றளவும் பரப்புகின்றனர்.

பக்தி என்பது வெறும் பூசனை அல்லது வழிபாடு ஒன்றோடு முடிவு பெறுவதன்று. மனிதப் பண்பு நிறைந்த ஒன்றே பக்தியாகும். அதனாலே பல பக்தி இலக்கியங்கள் இரப்பவர்க்கீய வைத்தாய் ஈபவர்க்கருளும் வைத்தாய்” என்று கொடை யி ைன,யும், பொய்யனைத்தையும் விட்டவர் புத்தியுள் மெய்யனை’ என்று வாய்மையினையும், * கல்லாதார். மனத்தனுகாக் கடவுள் தன்னை’ என்று கல்வினையும், வஞ்சமின்றி வணங்குமின்’ என்று வஞ்ச மில்லா உள்ளத்தையும், பிறர்தமைப் புறமே சொல்லக் கூசினார்’ எனப் புறங்கூறா நிலையினையும் வெய்ய மொழி தண் புலவருக்கு உரையாதவர்’ என்று இன் சொல்லையும் அப்பர் போன்ற தேவார ஆசிரியர்கள் பக்தி யோடு சார்த்தியுள்ளனர். தாயுமானவர் எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறி யேன் பராபரமே என்று உலகம் வாழப் பாடுபடுவதும் பாடுவதும் பக்தி நெறியாகக் காட்டுகிறார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்றார் வள்ளலார். எனவே பக்தி இயக்கம் தனிமனித வாழ்வாக மட்டும் அமையாது, மனித உணர்வோடு சமுதாயம் அனைத்தையும்-உயிர்கள் அனைத்தையும் ஒத்து நோக்கி ஒன்றாக இணைக்கும் பெருவாழ்வு நெறியாக அமைகின்ற உண்மையினை உணர வேண்டும்.

தொடக்கத்தில் சுட்டிக் காட்டியமை போன்று நம்பிக் கையே மனித இனத்துக்குச் சமயத்தையும் தமக்கு மேல் ஒ ன் று ன் ள து என்ற உண்மையையும் உணர்வையும் உண்டாக்கிப் பக்தி இயக்கத்தை வளர்த்துப் பக்தி இலக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/95&oldid=684912" இலிருந்து மீள்விக்கப்பட்டது