பக்கம்:தாய்மை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. சமயம் தத்துவம் தருக்கம்

உயிர்த் தோற்ற வளர்ச்சியின் உச்சியில் இன்று உள்ள மனிதன் தன் ஆற்றலால் எதை எதையோ படைத்துக் கொண்டிருக்கின்றான். அவ்வாற்றல் வெற்றியுறின் தான் என்ற தருக்கு மிக்கு, தன்னிலையில் தாழ்ந்து, சில: வேளை மிருகமாகின்றான். ஆனால் தோல்வியுற்றாலோ, தனக்கு மேலே உள்ள ஏதோ ஒரு சக்தி தன் முயற்சியினைத். தோற்கச் செய்துவிட்டது என எண்ணுகிறான். அந்தஎண்ணத்தின் அடிப்படையிலேதான் தனக்கு மேல் ஒரு கடவுள் உண்டு என்ற உணர்வு அவனுக்கு உண்டாயிற்று. எனவே மனிதன் தோன்றி வளர்ந்த அந்த நெடுங் காலத்துக்கு முற்பட்ட நிலையிலே சமய உணர்வு தோன்றி. யிருக்க வேண்டும். * > * .

 ! உணர்வு நம்பிக்கையின் அடிப்படையில் உண்டானது. இச்சமயம் நாடு தொறும் காலந்தோறும். பல்வேறு, மாற்றங்களைக் கொண்டு வளர்கின்றது. சமயங்கள் முதலில் அ ச் ச த் தி ன் அடிப்படையிலே தோன்றியன என்பர் ஆய்வாளர். தன் கருத்து முற்றுப் பெறாத காரணத்தால் அத் தடுக்கும் சக்திக்கு மனிதன் அஞ்சினான்; அது என்னென்ன கெடுதல்களை விளைவிக்குமோ என வேருண்டான். எனவே அதற்கு வழிபாடு. செய்ய நி  ைன த் தா ன்-பலிகொடுத்தான்-சில சமயம் மனிதனையே கூடப் பலி கொடுத்தான். ஆரியர்கள் சூரியனையும் அக்கினியையும் அச்சத்தின் காரணமாகவே. வழிபட்டார்கள் என்பர். தமிழ் நாட்டிலும் துர்க்கை, காளி, மாகி போன்ற கிராம தேவதைகள் அந்த அடிப் படையில் அமைந்தவையே. அண்மைக் காலம் வரையில் அவற்றிற்குப் பலியிடும் வழக்கம் நாட்டில் இருந்ததே.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/97&oldid=684916" இலிருந்து மீள்விக்கப்பட்டது