உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தாய்மை "இன்பசாகரன் இளம் அரும்பு! அந்த அரும்மை விரலால்கூட நசுக்கி எறிந்துவிட முடியும் நான் நினைத் தால்! "ஆனால், அந்த அரும்பு இருக்குமிடமோ அரண் மனைத் தோட்டம். வேலியற்ற கொல்லையல்ல், வேந் தன் வீட்டு முல்லை மொக்கு இருக்குமிடம்! சர்வ ஜாக்கி ரதையாக சதியை நிறைவேற்ற வேண்டும். இளவர சன் சாக வேண்டும். ஆனால் நாம் கொன்றதாகத் தெரியக்கூடாது-கொலை செய்யப்பட்டதாகவே செய்தி வருதல் கூடாது. இயற்கையாக இறந்தான் என்று நாடும், நாடாளும் மன்னனும் நம்ப வேண்டும். அதற்கு வழி சொல்லுகிறேன்!" "சொல்லும் மைத்துனரே சீக்கிரம்!” "இன்னொன்று கொடு, சொல்லுகிறேன்!" "இதோ! ஒன்றென்ன: ஒன்பது!" - -- "ஆகாகா! சுழல்! சொக்கி விட்டேன் - சொக்கி விட்டேன் முத்த போதையிலே மூளை வேலை நிறுத்தம் செய்து விட்டது. நாளை விடியற்காலை திட்டத்தோடு வந்து உன்னை சந்திக்கிறேன்!” "வேந்தர் பள்ளியறையை விட்டுப் போன பிறகு வாரும்!” "அவர் இருக்கும்போது வர எனக்குப் பைத் தியமா?" "சரி! திட்டம் நேர்த்தியாக இருக்க வேண்டும்!" "உன்னைப் போல!"