உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 7 என் வயிற்றிலே வளர்ந்து சொத்தாக மாற வேண்டும். கொண்டிருக்கும் சிசு இந்த நாட்டு செங்கோலுக்கு உரிமை பாராட்ட வேண்டும். அதற்குத் தடை அவ ளது அருமருந்தன்ன மகன்! தடை இடரப்பட ஒரு வழி கூறும் மைத்துனரே! உமது உதவியோடுதான் நான் ஜெயக்கொடி நாட்ட வேண்டும். "மைத்துனரே! உமது மறைவிலே நின்றுகொண்டு தான் என் ஜீவ லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும். ஏன் மௌனமாக இருக்கிறீர் பேசும்! விலகி நின்று பேசுகிறேனே என்ற கோபமா ? வேந்தர் வரும் நேர மாயிற்றே என்றுதான் பயந்தேன். இதோ... மூடிக் கிடக் கும் உமது முரட்டு உதடுகளை எனது ரோஜா இதழ் களால் திறக்கிறேன்... இச்! இச்!! போதுமா? நீண்ட விருந்து மற்றொரு நாளைக்கு! மைத்துனரே! சுந்தரபுரி யின் ராணி சுழற் கண்ணி-அவள் குழந்தைக்கு இந்த நாடு உரியது- இப்படி ஒரு நல்ல எதிர்காலம் தோன் றுமா? அதற்கான திட்டம், உமது தீட்சண்யமிக்க மூளை யிலே இப்போதே உதயமாகுமா?" "கவலைப்படாதே சுழற்கண்ணி! இந்த தீட்சண் த யன் இருக்கும்போது திட்டங்களுக்கா குறைவு? தித் திக்கும் முத்தங்களை நீ தந்ததுபோல், சித்திக்கும் யோச னைகளைத் தரவும் நான் தயங்க மாட்டேன். அரசரின் இளைய ராணியாவதற்கு அபூர்வமான ஆலோசனை வழங்கினேனே அதை மறந்தாயா? அதைப் போலவே ? இளவரசன் இன்பசாகரனை வாழ்க்கைப் புதரிலிருந்து பறித்துப் போட சரியான வழி கண்டு பிடிக்கிறேன்.