உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தாய்மை பலகணியின் வழியாகத் தூரத்திலிருக்கும் பூரணச் சந்திரனைப் பார்த்து ரசிப்பதிலே ஒரு மகிழ்ச்சி இல்லையா? அதுபோலவே அரசனை அருகிலே வைத்து அன்பு காட்ட முடியா விட்டாலும் தொலைவிலேயிருந்து அவனைத் தொழுது கொண்டிருந்தாள் கோப்பெருந்தேவி. பலகணிப் பார்வையாளர் மீது-நிலவு, ஒளி மழை யையாவது பெய்கிறது; அதுவும் கிடைக்க வில்லை அந்த "அபாக்கியவதி'க்கு ! இன்பசாகரன் மட்டுமே அவளுக்கு ஆறுதல் பொரு ளானான். அந்தப் பொருளையும் பூமியிலே புதைத்து விடத் துடித்துக் கொண்டிருந்தாள் சுழற்கண்ணி. அதற் கான திட்டத்தையும் தீட்சண்யன் தயாரித்து விட்டான். “இந்த சதியில் ஜெயம் நமக்கே!” என்று ஒருவரை யொருவர் தழுவியபடி உரக்கக் கூவி மகிழ்ந்தனர் ஊர் கெடுக்க வந்த ஜாலக்காரர்கள். திட்டத்தின் முதற்கட்டம் மிகத் தீவிரமாக அமுலுக் குக் கொண்டு வரப் பட்டது.

திடீரென சுழற்கண்ணி இளவரசன் இன்பசாகரன் மீது அன்பு மழை பொழிய ஆரம்பித்தாள். "அக்காளுக் கும் என்னைப் போலத்தானே ஆசையிருக்கும்-அவ ளோடும் பேசி மகிழ்ந்து, கூடிக் குலவியிருப்பதுதானே தங்களைப் போன்ற தர்மம் தவறாதவர்களுக்குத் தகுதி யான காரியம்!" என்று உபதேசம் செய்ய ஆரம்பித் தாள் மன்னனிடம்!