பக்கம்:தாய்லாந்து.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

பணிப்பெண் அட்டைப் பெட்டியில் கொடுத்த ஸ்வீட், ஆப்பிள் பழம், லேசாக வறுக்கப்பட்ட கோழி இறைச்சித்துண்டு!

பணிப் பெண்ணை அழைத்து, “ஸாரி... நான் வெஜிடேரியன்” என்றேன்.

அவள் கொஞ்சம் கூடப் பதட்டப்படாமல், “ அப்படியா! நோப்ராப்ளம்! இதோ இப்போதே உங்கள் உணவைச் சைவமாக மாற்றி விடுகிறேன்” என்றவள் அந்த இறைச்சித் துண்டைத் தனியாக எடுத்துக் கொண்டு “நெள இட் இஸ் வெஜிடேரியன்” என்றாள்.

பஸ்ஸின் தாலாட்டிலும் போர்வையின் அரவணைப்பிலும் சுகமான தூக்கம் கண்ணைச் சுழற்றியது. விடியும் போதுதான் தூக்கம் கலைந்தது. கீழ் வானம் செவ்வரிகள் தீட்டியிருந்தன.

மீண்டும் வாசனை டவல் கூடவே சுடச்சுட காப்பி!

கிட்டத்தட்ட எழுநூற்றைம்பது கிலோ மீட்டர் தூரம் பயணித்த அலுப்பே தெரியவில்லை.

47
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/45&oldid=1075208" இருந்து மீள்விக்கப்பட்டது