பக்கம்:தாய்லாந்து.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


வும் சங்கடத்துக்கு ஆளாகிறார்கள் என்று சொல்லி கொண்டே வந்த சொம்பட் காரை ஓரிடத்தில் நிறுத்தி இங்கேதான் புகழ் பெற்ற தாய்ஸ் உதேப் கோயில் உள்ளது. இறங்கிப் போய்ப் பார்க்கிறீர்களா என்று கேட்டார் சொம்பட்.

“கோயிலா? அது எங்கே?“ என்று கேட்டேன்.

“அதோ... மேலே பாருங்கள், தெரியும்...”

பார்த்தேன். தலை சுற்றியது.

“முன்னூறு படிகள் எறிச் செல்ல வேண்டும். முடியுமா?” என்று கேட்டார் சொம்பட்.

“வேண்டாம்; நான் இங்கிருந்தபடியே பார்த்து விடுகிறேன்“ என்றேன்.

கடகடவெனச் சிரித்தார் கய்டு.

அவர் சிரிக்கும்போதே, பழனி மலையில் உள்ளது போன்ற இழுவை ரயில் (விஞ்ச்) ஒன்று வந்து எங்களருகில் நின்றது.

அதில் ஏறிக் கொண்டதுதான் தாமதம்; அடுத்த சில நிமிடங்களில் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

கோயில் வாசலில் கண்டாமணிகள் எழுப்பிய ‘டாங் டாங்’ ஓசையில் ஊரே அதிர்ந்தது.

வெளிப்பிராகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கையில் ஒரு போர்டில், “ஒழுங்கற்ற உடைகள் அணிந்துள்ளவர்கள் உள்ளே போகக்கூடாது“ என்று எழுதப்பட்டிருந்தது.

“ஒழுங்கற்ற உடைகள் என்றால் என்ன?“ என்று விளக்கம் கேட்டேன் சொம்பட்டிடம்.

“மினி ஸ்கர்ட், அரை நிஜார், தொடை தெரிகிறாற்போன்ற உடை இதெல்லாம்தான்“ என்றார் அவர்.

“டூரிஸ்ட்களில் முக்காலே மூணு வீசம் பேர் முக்காலே மூணு வீசம் உடம்பு தெரிகிற மாதிரி ஒழுங்கற்ற உடை அணிந்து கொண்டு திரிபவர்களாய்த்தானே இருக்கிறார்கள்? அவர்களெல்லாம் கோவிலுக்குள் போய்ப் பார்க்க முடியாதா?”

“முடியும்?”

“எப்படி?"

60
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/58&oldid=1075225" இருந்து மீள்விக்கப்பட்டது