பக்கம்:தாய்லாந்து.pdf/84

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

அங்கே ஒரு பக்கத்தில் விநியோகமாகிக் கொண்டிருந்த பொங்கல் பிரசாதங்களை வாங்கி வந்து கொடுத்தார் சரவணன்.

“ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய விருப்பப்பட்டாலும், அதை ஏற்றுக் கொண்டு சாப்பிடும் அளவுக்கு இங்கே எந்த ஏழையும் வருவதில்லை. அதனால் நாங்கள் சமைத்த உணவை அம்மனுக்குப் படைத்து விட்டு எங்களுக்குள்ளேயே பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார்.

மகாமாரியம்மன் ஆலயத்தில் நம்மவர்கள் மட்டுமல்ல; சீனர்கள், தாய்லாந்து மக்கள் எல்லோருமே ஒருங்கிணைந்து ஒருமுகமாக வழிபடும் அதிசயக் காட்சி கண்டு வியந்தோம்.

மத நல்லிணக்கம், இந்து முஸ்லிம் ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு என்றெல்லாம் இங்கே மேடை அதிரப் பேசுகிறோம். பக்கம் பக்கமாக எழுதுகிறோம். இந்த நாட்டில் நமக்குக் கனவாக இருப்பதெல்லாம் தாய்லாந்தில் நனவாகியிருப்பதை நேரில் கண்டு மகிழ்ந்தோம்.

86
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/84&oldid=1075274" இருந்து மீள்விக்கப்பட்டது