பக்கம்:தாய்லாந்து.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf
இல்யாஸ்

அந்த மதிப்பு மிக்க கற்கள் பட்டை தீட்டப்படுமுன் எப்படி அடக்கமாக, சாதாரணமாக இருக்கின்றனவோ அப்படித்தான் திரு இல்யாஸும் அடக்கமாய்த் தோற்றமளித்தார். நம் ஊரில் சில பணக்காரர்கள் தன்னைப் பணக்காரன் என்று சொல்லிக் கொள்ள மாட்டார்கள். தான் ஒரு பணக்காரன் என்று தெரிந்தால் டொனேஷன் கேட்டுத் தொந்தரவு செய்வார்கள் என்ற பயம் தான்! ஆனால் இல்யாஸ், “எனக்குப் பணம் ஒரு பிரச்னையே இல்லை. கோடிகளில் சம்பாதிக்கிறேன். நிறையச் செலவும் செய்கிறேன்“ என்று ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிக் கொள்கிறார்.

தாராளமாகச் செலவு செய்கிறேன் என்று அவர் கூறுவது தமது சொந்தச் செலவை அல்ல. சமுதாயத்துக்குச் செய்யும் உதவிகளையே அப்படிச் சொல்கிறார். நிறையச் செலவு செய்கி-

88
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/86&oldid=1075276" இருந்து மீள்விக்கப்பட்டது