பக்கம்:தாய்லாந்து.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


தாய்லாந்து.pdf

 எழுபத்திரண்டு அறைகள் கொண்ட அவருடைய உட்லண்ட்ஸ் இன் நம்மைப் போன்றவர்களின் சொர்க்கமாக இருந்து வருகிறது. பாங்காக் ஜெனரல் போஸ்ட் ஆபீஸுக்குப் பக்கத்தில் மிகவும் சுறுசுறுப்பான பகுதியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் வரவேற்பரையில் எந்நேரமும் தமிழோசையைக் கேட்க முடிகிறது. ரெஸ்ட்டாரண்டில் சுடச்சுட இட்லி, தோசை கிடைக்கிறது.

யூசுப், ஹமீத், கான், பிலால், இதயதுல்லா, உத்ராபதி ஆகிய இளைஞர் பட்டாளம் ஒன்று இந்த ஓட்டலைச் சீரும் சிறப்புமாக நிர்வகித்து வருகிறது.

உள்ளே நுழையும் போதே ஏதோ ரொம்ப காலமாய்த் தெரிதந்தவர்கள் மாதிரி அன்பு காட்டி உபசரிக்கிறார்கள். இதை நான் இல்யாஸிடம் சொன்னபோது, “உண்மையில் இந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன்தான்“ என்று மகிழ்ந்து போனார்.

திரு இல்யாஸ் தமது சொந்த ஊரான சிதம்பரத்தையும் மறந்துவிடவில்லை. சிதம்பரத்தில் நடராஜர் கோவிலுக்கருகே ஒரு கல்யாண மண்டபம் கட்டியிருக்கிறார். அந்த மண்டபத்தை

90
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/88&oldid=1075278" இருந்து மீள்விக்கப்பட்டது