பக்கம்:தாய்லாந்து.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்துக்களின் உபயோகத்துக்காக மட்டுமே ஒதுக்கியிருக்கிறார்.

ஏற்கனவே தாய்லாந்து முஸ்லிம் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வரும் இவர் இப்போது பாங்காக் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் தலைவராகவும் ஆகியிருக்கிறார்.

பாங்காக் நகரில் அங்குமிங்குமாகச் சிதறிக் கிடக்கும் முன்னூறு தமிழக் குடும்பங்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கிடையே ஒரு நேச உணர்வை உண்டாக்குவதே இந்தக் கழகத்தின் நோக்கமாம். நண்பர் ஹுமாயூன் செயலாளராகவும், நண்பர் சலாவுதீன் பொருளாளராகவும் இந்தக் கழகத்தின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றிருக்கிறார்கள். பொங்கல், ரம்சான், ஈத், தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடத் திட்டமிட்டிருப்பதுடன் இல்யாஸை ஆசிரியராகக் கொண்டு ‘தமிழ் மலர்’ எனும் மாத இதழ் ஒன்றும் நடத்த முனைந்திருக்கிறார்கள்.

“இல்யாஸ் என்ற பெயருக்கு என்ன அர்த்தம்?” என்று அவரிடமே கேட்டேன்.

“இறைவனின் தூதன்“ என்று சொல்வார்கள் என்றார்.

வெளிநாடுகளில் சிலர் வாழ்ந்து வரும் முறையில், செய்கின்ற பணியில், அடைந்துள்ள புகழில், செல்வாக்கில் அவர்களை ‘அன் அஃபிஷியல் அம்பாஸ்டர்ஸ்’ என்று குறிப்பிடுவதுண்டு. இறைவனின் தூதர் என்று பெயர் கொண்ட இல்யாஸ் தாய்லாந்தின் அதிகார பூர்வமற்ற இந்தியத் தூதராகவே செயல் படுவதாக எனக்குப்படுகிறது.

91

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/89&oldid=1075279" இலிருந்து மீள்விக்கப்பட்டது