பக்கம்:தாய்லாந்து.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஏற்றிக்கொண்டிருந்த காட்சி பிரம்மாண்டமான சினிமா ஸ்கோப் படம் பார்க்கிற மாதிரி இருந்தது.

கோடி கோடியாக அந்நியச்செலாவணியை ஈட்டித்தருவது இந்தத் தேக்குச் செல்வம் என்றால் அந்தப் பெருமையில் பெரும் பங்கு இந்த தும்பிக்கைக் காரர்களுக்குத்தான் சேரவேண்டும்!

யா, உங்கள் விமானம் நாலரை மணிக்கு. ஆகவே, நீங்கள் இப்போதே புறப்பட வேண்டியதுதான்“ என்றார் ஹுமாயூன்.

“இப்போது மணி பன்னிரண்டுதானே ஆகிறது?”

“இங்கிருந்து விமான கூடம் போய்ச் சேரக் குறைந்தது இரண்டு மணிநேரமாவது தேவைப்படும். போக்குவரத்து நெரிசலையும் ஸிக்னல் தடைகளையும் கடந்து செல்ல வேண்டும் அல்லவா!’ என்றார்.

தாய்லாந்து சுற்றுப் பயணம் முற்றுப் பெற்று ஊருக்குத் திரும்பும் நேரம் நெருங்கியதும், அந்தச் சிரித்த முக மக்கள், ஹுமாயூன் வீட்டுச் சாப்பாடு, இல்யாஸின் விருந்தோம்பல், ‘தாய்’ கலாசாரம், கலைச்செல்வம், க்வாய் நதி பாலம், பெரிய பெரிய புத்த ஆலயங்கள், கூட்டம் கூட்டமாய் பிட்சுக்கள், இனிக்கும் இளநீர், ஆரஞ்சுஜூஸ், நடிகைபோல் தோற்றமளித்த அந்தப் பழக்கடை அழகி என்று ஏராளமான காட்சிகள் என்கண் முன் ஒடி மறைந்தன. நண்பர் ஹுமாயூனிடமும் இல்யாஸிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டபோது உணர்ச்சி வசமாகிக் கண்களில் நீர்த்திரையிட்டது.

முடிவுரை: இத்தனை வாரம் எழுதியது போக தாய்லாந்தைப் பற்றி எழுத வேறு ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிட முடியாது. கடலோரம் நின்று சற்றே கால் நனைத்திருக்கிறேன். அவ்வளவுதான்.

96
 
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்லாந்து.pdf/94&oldid=1075284" இருந்து மீள்விக்கப்பட்டது