பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 பவல் கொண்டு சுந்தரி தன் அத்தானின் மேனியைத் துடைத்தாள். அவளுக்குத் தன் கண்களின் நீரை மாத்தி ரம் துடைத்துக் கொள்ள முடியவில்லை 'அத்தான்!. ...ஏன் இப்படி புதிசாக என்னவெல்லாமோ பேசுறீங்க?...வந்தவர் எங்க ஆபீஸ் செக்ஷன் ஆபீஸர்!. ..இதயமுள்ள அபூர்வ மணி தர் அவர்;...நீங்களா என்னைச் சந்தேகப்படுநீங்க?. ...அன்பு டன் நம்ம ஆபத்துக்கென்று பணம் கடனுகத் தருவதை அட் ரிடமிருந்து வாங்கினல் அது தப்பா, அத்தான்;. ஆனலும், நான் வாங்கவில்லை! என் கவுரவத்தை- உங்க கவுரவத்தைக் கட்டிக் காக்க எனக்குத் தெரியாதா!. ... அவசரமாக சில பேப்பர் டைப் செய்யச் சொல்லிட்டார்!. .பாவம். அவ. ருக்கு நம் நிலைமை அப்போ தெரியாது! உங்களுக்கு உடம்பு சரியில்லேங்கிறது தெரிஞ்சு, பதறிப் போய் என்னை இங்கே ட்ராப் செய்துட்டுப் போக வந்தார்;...அத்தான்!...நான் எப் போதும் உங்க சொத்துத்தான்!...இதை நினைப்பூட்ட வேண் டிய தலைவிதி கூட எனக்கு வந்திட்டுதே!. . . கதறிள்ை. மூச்சு இரைத்தது. நடுங்கிக் கொண்டிருந்த அவன் கைகள் அவள் திசைக் குத் தாமாகவே குவியலாயின. வெளுப்புத் தட்டியிருந்த நகக் கண்களிலே சுடு நீர்ச் சரம் படர்ந்தது. "ஐயோ... நான் உனக்குச் சுமையாகி விட்டேனே!. . . ஓலமிட்டான்: "ஐயையோ!. . குருவாயூரப்பனே!. .. தெய்வத்தைத் துணைக்கு அழைத்தாள் சுந்தரி. "அத்தான் அப்படிச் சொல்லாதீங்க. தர்மம் பொறுக் காது!...நாம் ரெண்டு பேரும் ஒருவர் உயிரிலே இன்ைெருவ ர்ாக கூடு பாய்ஞ்சிருக்கிற உண்மை நமக்கு மட்டுமேதானே தெரியும், அத்தான்' - - - - . . : 3. ઋ { ※ விடிந்ததும், சுந்தரியால் எழுந்திருக்க முடியவில்லை. எங்கும் அசதி, அடித்துப் போட்ட மாதிரியாக அப்படிப் பட்ட அசதி, எழுந்தாள். மார்பகப் பகுதியில் லேசாக எரிச் சல் இருந்தது. குனிந்து நோக்கினுள். ஓரிரு இடங்களிலே