பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.33 நகத் தழும்புகள் மெல்லிய வரிக் கோடுகளாக அப்பியிருந் தன. எதிரே நோக்கினுள். மாதவன் ஸ்மரனே யற்றவன் போல-அப்படி காட்டுப் புலி போல் தூங்கிக் கொண்டிருந் தான். எப்போதாவது முன்பு இப்படித் துரங்குவான்! ஆனல், நோய் வசப்பட்ட இந்த ஏழெட்டு மாதங்களிலே இப்படி ஒருநாள் கூட இருந்தது கிடையாது. கொட்டாவி பறிந்தது. உடம்பை வளைத்து முறித்து, நெட்டி பறித்தாள். "அம்மாடி என்று முனகினுள். ம்:-நுட்பமான-அந்தரங்க பூர்வமான மூரல் அவளுக்கு மட்டுமே புரியும்படியானஅவளுக்கு மட்டுமே புரிய வேண்டிய பாஷையில் நெளிந்தது. 'சு...ந்...!”-அவன் முணுமுணுக்கவே, அவள் அண்டிஞன். அப்புறம் அவன் அசைந்தால் தானே?... அவள் உள்மனம் அழுதது. எதை நினைப்பாள். - எதை மறைப்பாள்?... சுந்தரி எழுந்தாள். பொழுது ஏறியது. அரிசியை உடைத்துக் கஞ்சி காய்ச்சினுள். இறக்கி வைத் தாள். சால் சட்டியில் பாலே ஊற்றினுள். அடுப்பு பற்றி எரிந்தது. நெருப்பு ஜ்வாலே கண்களில் அடித்தது. பால் பொங்கியது. "எல்லாம் தயார்'... கணவனைப் பார்க்க எண்ணி எழுந்தாள். சுவரில் தொங் கிய கண்ணுடி தெரிந்தது. காதுச் சிமிக்கிகளைத் தேடின. அவள் விரல்கள். காணவில்லை. ம்...அத்தானுக்கு ட்ரீட் மெண்ட் பண்ணின வகையிலே உண்டான கடனுக்கு என் நகை நட்டு, கடிகாரம் அது..இது எல்லாம் அடைஞ்சிடும்.” நடந்தாள். வெள்ளைக் காகிதம் ஒன்றை எடுத்து எழுதினள். மடித்து வைத்தாள். இனி நான் ஆபீஸ் வேலை பார்ப்பதை இவர் விருப்பமாட்டார்...என்னவோ,நோய் உபாதையால் 9