பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f0 படுத்த நினைச்சிருக்கிற அந்த அம்பலகாரருக்கு நல்ல பாடம் சொல்லித் தந்திடுறேன். கொடுத்த வாக்குப்படி எப்ப சீர் வரிசை செய்கிருரோ, அப்பதான் அஞ்சுகம் நம்ம வீட்டை மிதிக்க ஏலும் !...நீங்க ஆத்திரப்படாதீங்க !...” என்று உறுதிப் பாங்குடன் பேசினன் அவன்.

  • மச்சான் !...”

கண்ணின் மணிகள் கனவுகளை அலைக்கழிக்கவா அப்படித் தாரை தாரையாக நீரைக் கொட்டுகின்றன? --- ※ ※ : மேய்ச்சலிலிருந்து மன திரும்பிய பசுவுக்கும் கன்றுக்கும் தீனி போட்டுத் தண்ணிர் காட்டினுள் அஞ்சுகம். அந்தி வெய்யில் அவளது மேனியைப் பொன்னிறமாக்கியது. அந்தி வெய்யில் கண்ணுக்கு ஒசத்தியாயும் அந்தமாவும் தான் இருக்கும். ஆன, இன்னும் அரை நாழிப் பொழுது கழிஞ்சா, ஊரே இருண்டு போயிடுமே ?...என்னுேட வாழ்க்கை அந்தி வெய்யில் கணக்கிலே தான் தொடங்கிச் சு. அப்பா பிரமாத மாக கண்ணுலம் செஞ்சார் கார் ஊர்வலம், காந்த விளக்கு, விருந்து, மேளம் நாகசுரம் எல்லாந்தான் தடயுடலாயிருந் திச்சு. ஆன, இப்ப என் நிலைமை ?...ஒருவேளை. அப்பாவுக்குக் கடனே கிடைக்காட்டி, எங்கதி என்னுகிறது?...ஐயோயோ!...” ஒருமுறை புரட்டாசித் திருநாளன்று அஞ்சுகத்தைப் பார்த்தும் பார்க்காதது மாதிரி மடங்கி விட்டான் முத்து விங்கம். சற்று முன் சைக்சிளில் மெதுவாகச் சென்ற அவனை வாய் வலிக்க அலட்டினுள் அவள். திரும்பிப் பார்த்தும் கூட திரும்பி வராமல் சென்று விட்டான்! அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. இரவு வந்தது. இருட்டும் சேர்ந்தது. எங்கே இன்னும் அப்பாவைக் காணலே?... அவளது உயிரின் உணர்வு செயலிழந்து தவித். இது: - உச்சி வேளை கழிந்து, நீராடித் திரும்பினர் மாசிமலை அம்பலம். மன உளைச்சலில் உழன்று கொண்டிருந்தாள்