பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 திருமணவினை முடியப் பெற்றதும் பெண்ணே அழைத்துக் கொண்டு மாப்பிள்ளை மறுவீடு செல்வது நடைமுறைப் பழக்கம். அப்போது, பெண்ணுக்குத் தாய் வீட்டில் சீர் வரிசை வைப்பார்கள். ஒரு நாள் காசி அம்பலம் தம் மகனை விளித்தார்: 'தம்பி, உம் மாமன் மாசிமலை அம்பலம் ஒனக்கு ஆயிரம் ஆருபாய் சீர் வரிசையும், நூறு சேருக்கு வெள்ளிச் சாமான் களும், முப்பது பவுன் நகை நட்டும் செய்கிறதாச் சொன்னுரு. இது சம்பந்தமாய் ஆள் அனுப்பிக் கேட்டு விட்டதுக்கு, ஐப்பசி பிறந்ததும் தான் சீர் வரிசை வைக்கிற துக்கு நான் சொல்ல முடியும்னு பதில் சொல்லிட்டாராம்!... இப்படி ஒரு நடப்பு நமக்குள்ளாற இதுக்கு முந்தி நடந்திருக் குதா ?...பணம் காசை ஒளிச்சு வச்சுக்கிட்டு, எனக்குக் குறைச்சல் பண்ண வேணும்னு கங்கணம் கட்டியிருக்கார் அந்த அம்பலகாரர்.கண்ணுலம் நடந்து முடிஞ்ச கையோ உவே சீர் வரிசை வைக்கிற நம்ம குல வளமையையும் காற்றிலே பறக்கவிட்டுப்புட்டாரே ! ம்...மாசிமலை என்னை மட்டும் ஏமாத்தலே, உன்னையும் சேர்த்தாக்கும் ஏமாத்திப் புட்டாரு !...இதை மறந்துப்பிடாதே !...நமக்குத் தகாத இடத்திலே கொள்விளை கொடுப்பினை வச்சுக்கப்பிடாதிங் கிறது எவ்வளவு நியாயமிங்கிறதையும் புருஞ்சுக்க தம்பி!' முத்துலிங்கத்தின் உடல் துடித்தது; உள்ளமும் துடித் தது. மாசிமலை என்னை மட்டும் ஏமாத்தலே; உன்னையும் சேர்த்தாக்கும் ஏமாத்திப்புட்டாரு! - இம்மொழியினுள் அவன் சுற்றினன். வெட்டுப்பழி குத்துப்பழியாக்கிடந்த விரோதத்தையும் கூட ஒதுக்கி வச்சிப்பிட்டு, என்ைேட ஆசையை நிறைவேத்தினவுகளாச்சே எங்க அப்பா?... அவரோட மதிப்பு மரியாதையையும் விட்டுக் கொடுத்து எதிரி வீட்டிலே பரிசம் போடத் துணிஞ்சவருக்கு வேணு மிண்ணே தான் இப்படிபட்ட ஒரு இக்கட்டை மாமன்காரரு ஏற்படுத்தியிருக்க வேணும்: ஆமா!' முத்துலிங்கம் தன்னுடைய இள மீசையை முறுக்கிவிட் டுக் கொண்டான். அப்பா!...நம்மளை ஏமாத்தி இழிவு