பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

140

    ஆசையுடன் அவள் கையால் பூப் போட்டுப் பின்னிக் கொடுத்திருந்த பை அலங்கோலமாய்க் கிடந்தது.

அந்தப் பையினின்றும் வகை வகையான அரிசி மணிகளும், சில பைசா காசுகளும் சிதறி இறைந்திருந்தன!...

  மாதவனின் புகைப்படம் மணந்தது. சுந்தரி சூன்யமாகி நின்ருள்.
 .அத்தான்! கடைசியில் நான்தான் உங்களுக்குச் சுமையாகி விட்டேளு? ஊ ஹூம், அப்படி நான் கருதமுடியாது. ஏனென்ருல், நம் இருவர் உயிர்களும் ஒன்றில் ஒன்ருக உயிர் மாற்றம் பெற்றிருக்கையில், நம் இருவர் உடல்களும் ஒன்றுக் கொன்று சுமப்பதென்ருல், அப்புறம் நம் இருவர் கதையும் வெறும் கதையாகி விடாதா?. .ஆம்; நம் முடிவும் அப்படி வெறும் கதையாக ஆகிவிடக் கூடாதேயென்றுதான், என் கோரிக்கையை நிறைவேற்ற காத்திருந்த இந்த விஷக் குப்பி யைக் கூட நிராகரித்து விட்டேன்!...நாள் உங்களுடன் வாழ வேண்டிய வாழ்வு இன்னும் குறை விட்டிருப்பதாகவே என் உள்மனம்-என் மனத்தின் உங்கள் மனம் எச்சரிக்கை செய் கிறது!...ஆகவே உங்கள் சுந்தரி-என் மாதவனுடைய சுந்தரி உங்களுடன் மனத்தால், மாண்பால், மதியால், வைராக்கியத்தால் இந்த பயங்கரமான உலகத்திலே தானே ஒரு அதி பயங்கரமாகி வாழ்வாள்!...ஆஹா இப்படி நீங்கள் மனம் விட்டுச் சிரிப்பதை அனுபவித்து எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன!...இனி நானும் சதாசிரித்துக் கொண்டேயிருப் பேன், அத்தான்! ம்! .. - - - - - -
  விடியவில்லை.
  பூப்போட்ட அந்தப் பையுடன் அதோ புறப்பட்டு விட்டாள் சுந்தரி! -