பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

139

  மாதவன் எங்கே?...
  அத்தான்!... 
  பெருங் குரலெடுத்து விளித்தாள்.
  அவள் எங்கே
  அவள் தவித்தாள். பதறினுள். துடித்தாள்: 
  மாதவன் எங்கே?...எங்கே மாதவன்?      ஓரிடத்தில் வட்டியைத் தள்ளிக் கொண்டார்கள்.
  ஆளுல் இங்கே முதலுக்கே ஆபத்து வந்துவிடும் போலிருக்கிறதே!...
   எங்கெல்லாமோ தேடினுள்.
   இன்னமும் மாதவன் மீளவில்லை.
   இருட்டு வந்தது.
   ஒளியைக் காணுேமே!
   "அத்தான்!...அத்தான்!...
     மயங்கிச் சுருண்டாள். வாசல் தூணில் சார்ந்தபடி, கண்ணிர் பெருக்கினள். தாலி எம்பி எம்பித் தணிந்தது.
     கைவண்டி ஒன்று வாசலில் வந்து நின்றது. தெருவிளக்கு வெளிச்சம் மங்கலாக இருந்தது.
     மாதவனே கைத்தாங்கலாகத் தூக்கி வந்து உள்ளே மெத்தையில் போட்டார்கள். வாயில் ரத்தம் நுரை, கக்கினசுவடு காய்ந்து கிடந்தது.
     "வழியிலே இவரு அடிப்பட்டுக் கெடந்தாரம்மா!... இவரை எனக்குத் தெரியும்...பாவம்'..கையிலே இந்தப் பை இருந்திச் சம்மா!...நீ கொடுத்து வச்ச புண்ணியம் அவ்வளவுதாம்மா...தாயே!...”