பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 தயாராகியிருந்த அந்த சாமான்கள். அவள் வரை கமை தாங்கியாக இயங்க முடியவில்லை. எல்லாம் செஞ்சவுங் களுக்கு முடிவிலே ஒரு ஆயிர ரூவா புரட்டிக்கிடத்தான் பாதை மட்டுப்படலையாக்கும் ? எல்லாம் சுத்தப் புளுகு!... மாமன்காரரை வேணும்னே நையாண்டியும், கிருத்திரு வமும் செய்யத்தான் அப்பாரு இம்மாம் பெரிய நாடகத் தைப் போடுமுருபோலே!...ஆமா!' பலார் என்று பொழுது விடிந்து விட்டது. “ஐப்பசி பிறந்து எம்மேல்ே அப்பாவுக்குக் கோபமாத்தான் இருக்கும்!” என்று மனம் புழுங்கிய அஞ்சுகத்தைத் தேடிக் கொண்டு மணியகாரரின் வில்வண்டி வந்து நின்றது. 'அம்மா அஞ்சுகம்!...” என்று வாஞ்சையுடன் அழைத்த வாறு வெளித்திண்ணையில் அமர்ந்தார் மணியகாரர். ஐயாவுங்களா? வாங்க!' என்று வரவேற்ருள் அஞ் சுகம். 'இந்தாம்மா, இந்தப் பையிலே ஆயிர ரூபாய் இருக் குது. நல்ல நாளும் அதுவுமா உன்னை புருஷன் வீட்டுக்கு சீர்வரிசையோட அனுப்புறதுக்கு ஏற்பாடு பண்ணச் சொன் ளுரு.அவசர காரியமா அறந்தாங்கியிலே தங்கியிருக்காராம். நாளைக்கு விசேஷத்துக்குக் கட்டாயம் வந்திடுவார் அம்மா' என்று சொன்னர் அவர். அஞ்சுகத்தின் கைகளில் ஆயிர ரூபாய் இருந்தது! அப்பொழுது வாசலில் மற்ருெரு வண்டி வந்து நின்ற அரவம் கேட்டது. அரவம் தீண்டிற்ை போன்று திகைத்தாள் அஞ்சுகம் அப்பா ஐயையோ” என்று அலறிஞள். மாசிமலை அம்பலத்தைக் கட்டிலில் கொணர்ந்து கிடத் தின்ை முத்துலிங்கம். கவிழ்ந்த தலையுடன் நின்ருர் காசி அம்பலம். அவரது கைகள் மாசிமலையின் நெற்றித் தழும்பில் வடிந்த ரத்தத்தைத் துடைத்தன.