பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

  • அப்பா!... அப்பா!... எம்.மேலே கோவிச்சுக்கிட் டிங் களா? அதாலேதான இந்த மூன்று நாளா உங்க மகளை மறந்து இருந்தீங்க?' என்று விம்மினுள் அஞ்சுகம். தன்னு டைய ஆசை மச்சான்-மாமனுர் ஆகிய இருவரின் உருவங் களை அவள் மறந்து போய் விட்டாளா?

'அம்மா அஞ்சுகம், என்னை மன்னிச்சுப்பிடு தாயே!... உனக்குச் சீர்வரிசை செய்யிறத்துக்கு ஆயிர ரூபாய் சமாளிக் கக்கூட செகல் இல்லாத பாவியம்மா நான்! உனக்குத் தெரியாது!... நம்ம வீட்டை அடகு வச்சுத்தாம்மா உன் னுேட கண்ணுலத்தைப் பெரிசா நடத்தி, உனக்கு நகை நட்டு, வெள்ளிச் சாமான்களையும் செஞ்சு வைச்சேன்!.. கடைசியிலே ஒண்ணும் தோதுப் படலைண்ணு, வீட்டையே வித்துப் புடவும் துணிஞ்சேன். ஆன, வீட்டுப் பேரிலே கடன் தந்த ஆயிங்குடி கங்காணி, வீட்டை விலக்கு வாங் கிக்கிட ஒப்பல!... பணம் இல்லாம உங்கண்ணிலே முழிக்கப் படாதிண்ணு ரோசிச்சு கண்மறைவாக் கிடந்த நான் இப்ப எப்படி இங்கே வந்தேன்?... ஆ. . ' - மாசிமலை அம்பலத்தின் விழிகள் சுழன்றன. அவர் நோக்கு அருகில் நின்ற தம் மாப்பிள்ளையையும் சம்பந்தியையும் துழாவியது. திகைப்பு ஊர்ந்தது. "அப்பா, என்ன சொல்லுறிங்க?... நீங்க கொடுத்து விட்டதாக நம்ம மணியக்கார ஐயா ஆயிர ரூபாய் தந்திருக் காங்களே. இந்தாப்பாருங்க, பணம்!” என்று விவரித்து, ரூபாய்த் தாள்களைப் பிரித்துக் காட்டலாள்ை அஞ்சுகம். "என்ன கூத்து இது?’ என்ருர் மாசிமலை அம்பலம். படுக் கையை விட்டு எழுந்திருக்க முயன்ருர்; முடியவில்லை. நரை முடிகள் இளங்காற்றில் அல்லாடின. 'சம்பந்தி ஒண்னும் அதிசயக் கூத்து கிடையாதுங்க. நாம வெளிப்படையா என்னதான் குரோதம் பாராட்டி வம்பு வளர்த்துக்கிட்டு சண்டை போட்டாலும் நம்ம மனசுங் களுக்குள்ளே நம்மளையும் அறியாம ஒருவகைப் பாசமும்