பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அன்பும் பெருக்கெடுத்துக்கிட்டிருக்கும். அந்தப் பாசமும் அன்புந்தான் கூத்து விளையாடியிருக்குது! புரியலேயா?. க்ேளுங்க: நீங்க. ஆயிர ரூபாய்க்குச் சீர்வரிசைப் பணம் செய்யவேணும்னு மல்லுக்கு நின்னேன்.ஆன, உங்களுக்கு வகை உண்டாகல்லே! மனசு பேதலிச்சு நீங்க பைத்தியம் கணக்காச் சுத்தின சேதி எம் மகனுக்கு கிடைச்சுது. மாமன் சொன்ன வாக்கைக் காப்பாத்தாம நம்மளை ஏமாத்திற: தாவது-அப்படிங்கிற ஆத்திரத்தைக்கூட அவன் மறந்து, தன் அம்மா மூலமா ஆயிரத்தைச் சேத்து மணியக்காரர் மூலமா அனுப்பிச்சிருக்கான். இந்தத் துப்பு எனக்குத் தெரிஞ்சுது. அவன் செஞ்ச இந்த நல்ல காரியம் எனக்கு இன்னெரு புதுப் பாடத்தையும் படிச்சுக் கொடுத் திச்சு. புத்தம் புதுத் தம்பதிகளே முப்பது முப்பத்தைஞ்சு நாள் பிரிச்ச தப்புக்காக மனசுநொந்தேன். முத்துலிங்கம் போட்ட நாடகத்தை நினைச்சுக்கிட்டே வண்டியிலே வந்துக் கிட்டிருக்கையிலே, நீங்க என்ளுேட வண்டியை மறிச்சுக் கிட்டு வந்து விழுந்தீங்க!... சுய ஞாபகம் இல்லாத உங்க போக்குக்கு இந்தப் பாவிதான் ஆதிகாரணம்! நீங்க என்னை மன்னிச்சிருங்க! தம்பி முத்துலிங்கம்! அம்மா அஞ்சுகம்: இந்தக் கிழவனலே உங்களுக்கு எந்தச் சோதனையும் உண் டாகாது! சாமி ஆணை இது!” காசி அம்பலம் கண்களைத் துடைத்துக்கொண்டார்! ※ : ※ தாய் வீட்டுச் சீர்ச் சாமான்கள் நிறைந்த வண்டியைப் பின்தொடர்ந்த மாசிமலைத் தேவரின் கையில் வெற்றிலைப் பாக்குச் சூழ காட்சியளித்தது ஆயிர ரூபாய், மேளம் முழங்க நாதஸ்வரம் ஒலிக்க மாப்பிள்ளையின் மனையை மிதித்த வேளையில் மாசிமலையின் உள்ளம் நன்றியுணர்வினல் கசிந் தது: ஆத்தா விளையாட்டு வேடிக்கையாத்தான் இருக்குது: சீர்ப்பணத்துக்கு கெடுபிடி பண்னினவுங்களே கடைசிலே சீர்ப்பணத்தையும் தந்திருக்கிருங்களே!.. இந்த ஆயிர ருவாயை அடைச்சாத்தான் எனக்கு நல்ல மூச்சுவரும்:என்மகளுக்கும் நிம்மதி அண்டும் - - - .