பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்க்கழு உதயத்தின் சூடு படர்வதற்கு முன்பாகவே, அடுப் பைச் சூடு பண்ணிள்ை; அரிசி களைந்து போட்டுச் சோறு ஆக்கினுள்; பழைய சுண்டல் குழம்பையும் முருங்கக்காய்த் தாண்களையும் எடுத்துக் கிண்ணத்தில் வைத்தாள். சோற்றுச் சட்டியை நிரப்பி, வடுமாங்காய் இரண்டையும் உப்புக்கற் களையும் ஒரத்தில் வைத்து மூடினுள். மிச்சம் வச்சிடாமச் சாப்பிடுங்க, மச்சான்! அப்பத்தானுங்க மேலு அசதி தெரி யாம, வேலை பார்க்கலாம்!” என்று சொல்லிக் கணவனை வழி கூட்டி அனுப்பினுள், அஞ்சலை. மருதமுத்து தன் குழந்தையை வாங்கி உச்சி மோந்து நீட்டினன். ராசாத்திக்குட்டி பத்தரம். .வர வர அறந் தாங்கி பெரிய பட்டணமாட்டம் ஆகிடுச்சு...எந்நேரமும் லாரி தொல்லைங்க மாளலே!...மக ஜாக்கிரதை' அவன் புறப்பட்டான். புறப்பட ஒப்பாதவன்போன்று புறப்பட் உான் ! அஞ்சலை நெடுமூச்சைப் பிரித்தாள். ராசாத்திக்குட்டிக் குப் பாலமுதம் ஈந்தாள். பிறகு, ஒட்டுத்திண்ணையின் முந்த வில் இருந்த சாம்பல் துணுக்கைக் கிள்ளி எடுத்துப் பல் துலக் கிளுள். அப்பொழுது, சாலையைப் பிய்த்துக்கொண்டு ஓடிய லாரியினை ஒட்டிச் சென்ற அவ்வுருவத்தைக் கண்டதும், அவள் அரைக்கணம் அப்படியே மலைத்துச் சிலை வடிவம் ஆளுள்!. . 'அந்த உருவம்!...” எண்ணங்களின் இயல்பே கனவு காணுவதுதானே. எண்ணங்களைக் கூட்டினுள் அஞ்சலை. கனவின் தொடு வானமாக அந்த உருவம் அவளுள் தோன்றி மறைந்தது, நொடிப்பொழுதுக்கு முந்தி மின்னலாய்த்தோன்றி, மின்ன