பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 லென மறைந்திட்ட பாவனையில் உள்ளத்தே கிளர்ந்த நடுக் கம் உடலெங்கும் பரவ, அந்நடுக்கத்தின் ஊடும்பாவுமாக, காலத்தின் நடந்த கதை சிலிர்த்தெழ, அச்சிலிர்ப்பின் நிழலில் ஒடுங்கித் தங்கக்கூட மனமின்றித் தடுமாறிய அவளிடம் ராசாத்திக்குட்டி மறுபடியும் 'ங்காவுக்கு ஓடி வந்து நச்ச ரித்துத் தீர்க்கவே, அவசரம் அவசரமாக வாய் கொப்புளித்து விட்டு தலைவாசல் மண் தரையில் சாணத்திட்டை காலால் எற்றிவிட்டவளாக குந்தினுள். - 'அத்தே!...மனுசன் என்னமா லாரியை ஒட்டுகிருன், எமட்ைடம்!...ஆத்தாடி!...” கள்ளத் தெருப் பிள்ளையார் முகத்தில் காலைக் கதிரொளி அழகுடன் இணைந்தது. ஏப்பம் பறித்தபடி, ராசாத்தி நடைபழகத் துடித்தது. பழங் கஞ்சியை வார்த்து கும்பாவில் ஊற்றி, உப்புக்கல் துரவி, வெஞ்சனத்தை அகப்பையில் மொண்டுகொண்டு, நிலைப்படிக்கு அப்பால் உட்கார்ந்த பிறகுதான், ஏதோ, நினைவு வர, எழுந்து மாடத்திலிருந்த திருநீற்றை-எடுத்துப் பூசிக்கொண்டு, மஞ்சள் தாலியை எடுத்துக் கண்களிலே ஒற்றிவிட்டு, நிம்மதி கொடி கட்டிப் பறக்க, உட்கார்ந்தாள். "மச்சான் இந்நேரம் வெள்ளாத்துப் பாலத்தடிக்குப் போய்ச் சேர்ந்திருக்கும். .பாவம், உக்கார நிக்கக்கூட ஏலாதாம்’ ம்!..வாழ்க்கையிங்கிறது. சிலவுங்களுக்கு ஒரே குல்லுமாலுசெப்பிடு வித்தையாப் போயிடுது...எங்களைப் போலவுங் களுக்கோ நித்த நித்தம் செக்காட்டாம் கணக்குத் தான்!...” - இரு வேறு துருவங்களில் வாழ்க்கை எனும் தத்துவத்தை அவளளவிலே எடை நிறுத்தபோது, ஒரு முனையில் தன் ஆசை மச்சானின் பிம்பம் தோன்ற, அதற்கு நேரெதிர் முனையில் அந்த லாரிக்காரனின் உருவம் தோன்றலாயிற்று. அவளேயும் அறியாமல் தோன்றிவிட்ட ஒரு முடிவாக-திட்ட மிடப்படாத ஒரு தோற்றமாகக்கூட அவள் எண்ணவேண்