பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 "அந்த உருவம்...!” அஞ்சலைக்கு வேர்வை வழிந்தது. 'அந்த ஆம்பளைக் கின்னு ஒரு துருசு. .ஒரு பதட்டம்...ஒரு ஆவேசம்!...ஆத் தாடி!. .நல்லவேளை, ஆத்தா என்னைக் காப்பாத்தின, அந்த ஆளுகிட்டேயிருந்து!...ம்..” உருவம் என்ருல், அதற்குப் பெயர் இருக்க வேண்டு மென்பது மரபு, விதி அல்லது நியதி! ஆகவே, அந்த உருவத்துக்கும் பெயர் இருந்தது. அது: நாகப்டன். நாகப்பன் என்ற பெயரில் பசை இல்லாவிட்டாலும், அவனிடம் ரொக்கமாக இரண்டாயிரம் புழங்கியது. அண்டை அயலில் இருந்த அவன் ஒரு தரம் அஞ்சலையின் ஊரிலே தேர்த் திருநாள் வேடிக்கை பார்க்கச் சென்றிருக் கையில், பேசும் விழிகளே-பேசவைக்கும் கன்னங்களைசிரிக்கும் இதழ்களை-சிரிக்க வைக்கும் முகவிலாசத்தைத் தரிசித்தான். அந்த லாவண்யத்துக்கும் பெயர் இருந்தது. துவே அஞ்சலைيبي 'ஒட்டி விசாரிக்கப்போன, அஞ்சலைப் பொண்ணு ஒரு வகைக்கு எனக்கு எட்டத்து முறைதானக்கும் சபாசுன்ன :ளும்!. .ஏ. ஹே!' என்று மனம் குதிபோட, மெள்ள நடந்து, அஞ்சலையின் தாயிடம் பேச்சுக் கொடுத்து, அப்படி இப்படியென்று போன இடத்தில் ஒரு வாய்க்ரு மோரும், ஒரு தரத்துக்கு வெற்றிலைச் சருகும் போட்டுக்கொண்டு, அந்த ஜோரிலேயே பரிசத்துக்கும் அடிபோட்டுவிட்டான். அப்புறம்தான் வந்தது வினை. ஆம் s ఎడిణాதான்! எதற்கு?... . விதிக்கு1. •. 線