பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 ஜன்னலுக்கடியில் தூசிபடிந்த தரையில் பரந்துகிடந்த வற்றை மேஜை மீது அவர் விசிறிப் போட்டது நினைவுக்கு வந்தது. கிழிக்கப்படாத உறையிட்ட கடிதங்களேயும், கிழிக்காமல் பார்க்கக் கூடிய கார்டுகளையும் அவர் படிக்க வில்லை; தபால் அஞ்சலில் வந்திருத்த சஞ்சிகைகள் சில வற்றை எடுத்த எடுப்பில் பிரிக்கலாஞர். அங்கு வந்திருந்த நான்கு பத்திரிகைகளிலும் நான்கு பெயர்கள் சாந்தினி” வடிவில் அழகு காட்டி அச்சில் நின்றன. அவள் எழுதியிருந்த கதைகள் அந்தப் பத்திரிகைகளில் பிரசுரமாகியிருந்தன. அவள் கதாசிரியை. உலகத்திலே சாதாரணமாக ஜோடி-ஜோடி என்று பேசிக் கொள்வார்கள். இருமணம் ஒன்று சேர்ந்த தம்பதி களுக்கே ஜோடி என்ற சொல்லின் முழு அர்த்தம் நிலவ முடியும். அப்படிப்பட்ட இணைகளே உலகில் நடைமுறையில் காண்பது அபூர்வம். அத்தகைய தொன்றுதான் இந்த ஜோடி-சுதர்சன்-சாந்தினி எண்ணுமல் தோன்றும் கற் பனைபோல் ஆனதோ என்னவோ இவர்கள் வாழ்வு வையத் திலே! காதலர்கள் தம்பதிகளாகவில்லை. முன்பின் முகமறி யாதவர்கள் தம்பதிகளாயினர். மணப்பந்தலில்தான் அவர் கள் கண்ணுடியில் பார்த்துக் கொள்வதுபோல ஒருவரை யொருவர் முகம் கண்டார்கள்; அவர்கள் முகங்களிலே இத யங்கள் பிரதிபலித்திருக்க வேண்டும். ஜோடியென்ருல் இது தான் எடுத்துக் காட்டு போலும்! காலண்டர் தேதி காட்டி நின்றது. சொல்லி வைத்தாற். போலிருந்தது நாள். இதற்குச் சரியாக ஒரு வருஷத்திற்கு முன்னர்தான் அவள் அவர் மனைவியாளுள்; அந்த ஆண்டு தான் எவ்வளவு சடுதியில் ஒரு கணம் போலப் பறந்து விட் டது! அப்போது சாந்தினி இருந்தாள். ஆல்ை, இன்ருே அவருக்கு ஒரு கணத்தைக் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றியது. காரணம், சாந்தினிமன் விட்டாள். அவளிருந்த இடம். வி.