பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 வையம் நடுங்கியது. அவர் ஓலமிட்ட குரலில் அவர் நெற்றிப் பட்டையிலிருந்து ரத்தம் பீறிட்டுக் கொண்டிருந் தது. திரும்பினர். கண்ணுடியின் தன் உருவம் மட்டுமே கண்ட அவரது உள்ளம் ஏமாற்றங் காட்டியது. அவர் அழு தார். சூன்யமான இதயத்தை இழுத்துப் பிடித்துக்கொண்டு அடி பார்த்து அடியெடுத்து வைத்தார். சாந்தினி, நீ இங்கேயா இருக்கிருய்?: ஆனந்த அலை அவர் கண் வட்டங்களில் அடிவருட அவர் அழைத்தார்; நெருங்கினர் வெறிபிடித்தவராக மறுபடி யும் அவர் நெற்றியில் பலத்த காயம் கனிந்திருந்தது. மூச்சு விட்டு விட்டுப் புறப்பட்டது. உணர்வு விழிப்புத் தரவில்லை. "ஹாலே மையமிட்டு உத்தரத்தில் மாட்டியிருந்த அந் தப் புகைப்படத்தைக் கண்டதும் தான் சற்று முன்னர் அவர் அப்படி அலறிஞர்: ஆபத்து வந்தது. அதுதான் சாந்தினி. அவர் உயிர்த்துணை. அவருக்கு உள்ளத்திள் உள்ளமாக, உயிரின் உயிராக. துடிப்பின் துடிப்பாக இருந்தவள் சாந் தினி. அவரது வாழ்க்கையின் பாதிப்பங்குரிமை பூண்டவள்; அவருடைய மறுபாதி அவள். அவள் சாந்தினி! போய் விட்டாள்! சுதர்சன் நின்று கொண்டிருந்தார். குல்விளக்கு அணேந்து விட்டது! அவர் இருட்டில் தத்தளித்தார். எங்கோ ஒலித்த மாதா கோயில் மணியின் நாத அலை கள் காற்றில் மிதந்து வந்து இரவு மணி எட்டு என்பதைக் காலத்திற்குக் காத்திருந்தவர்கட்குத் தெரிவித்தன. காலங் காட்டுவதில்தான் இந்தக் கடிகாரங்களுக்கு எத்தனை கடமை உணர்ச்சி ஒட்டியிருக்கிறது! விடிந்தது, பொழுது. அடுத்தநாள் சுதர்சன் மனித யந்திரமாக இயங்கத் துளி சக்தி பிறந்திருந்தது உடலில். எழுந்து நடமாடினர்: வெறும் உயிர்க்கூடு; அவ்வளவுதான்!