பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? இரண்டாம் திருமணம் பற்றிய சில குறிப்புகள் கண்டிருந்: தன. அது-அந்தப் புத்திமதி-அக்கடிதத்தின் வாசகம்ஏன்-அதன் ஒவ்வொரு சொல்லும் அது போது அவருக்கு உள்ளத்தைப் பற்றி எரியச் செய்தது, நெஞ்சம் பொறிபட்ட பஞ்சாகிற்று. - 'உயிரும் உடலுமாக வாழ்ந்து விட்டு, சாந்தினியை மறந்து இன்னுெருத்தியுடன் புதுவாழ்வு தொடங்குவதா? சாந்தினி, சத்தியமாக, நான் உனக்குக் கட்டிய மாங்கல்யத் தின் மீது ஆணையிட்டு...உன் நினைவு மேல் உறுதி கூறிச் சொல்கிறேன்: இனி நீ தான் என் வாழ்வு. .வையம் எல் ல்ாம். உன் இன்ப நினைவு ஒன்றே இனி என் வருங் காலம். . சாந்தினி. . . என்று அவர் மனம் பேசத் தொடங் கிற்று. அவர் காது கொடுத்துக் கேட்கத் தவறுவாரா? கடிதங்கள் பற்ந்தன. தன் சகோதரிக்கு அவர் போட்டிருந்த கடிதத்தின்" பிரதி இது. அன்புக்குரிய சகோதரி அவர்கட்கு, நமஸ்காரம். உங்கள் கடிதம் கண்டேன். உங்கள் புத்திமதிக்கும் நன்றி. தயவுசெய்து இனி என் சொந்த வாழ்வில் குறுக் கிடாதிருக்க வேண்டுகிறேன். சாந்தினி என் வரை இறந்து விடவில்லை; என்னுள் உயிரோவியமாக இதோ ஆனந்த நட மிடுகின்ருளே. அன்றும், இன்றும், ஏன் என்றுமே என் சாந்தினிதான் என் துனை. . .உயிர்த் துணை! தங்கள் சுதர்சன்.

$3. ※ 米

சுதர்சனுக்கு உடம்பு அனலாகக் காய்ந்தது. அவர் அடித்துப் போட்டாற்போலக் கிடந்தார் படுக்க்ையில். பக். கத்து வீட்டு நண்பர் வந்து இருந்து அவரை --- னித்தார். அவர் ஓர் இலக்கியரசிகர்: