பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 களே அவர் ரசித்துப் படிப்பார். சந்தர்ப்பங்களும் ஒன்று பட்ட குணங்களும் அவர்கள் நட்பை வளர்த்தன. சுதர்சனுக்குப் பேச்சுமூச்சில்லை; விழிகள் திறக்கவில்லை. சாவிகொடுத்த கடிகாரம் அந்தச் சமயத்துக்கு ஏதோ ஒடு வதைப் போலத்தான் அவரது உடலும் இயங்கிக் கொண்டி ருந்தது; ஆனால், அவருக்கு தன்உடம்பைப் பற்றிக் கவலையே இல்லை. அதைப்பற்றிக் கவலைகொண்ட ஒரே உயிர் சாந்தினி தான் போய்விட்டாளே! நாட்களைக் கழிக்க வேண்டுமே என்பதற்காக ஹோட்டல் சாப்பாடு, கடற்கரை, காரியால யம் என மாறி மாறிச் சுழன்றது-அவர் திட்டம். அவர் திட் டத்தில் உடல் நலம் பேணுவதற்கான ஒன்றுமில்லை. அவர் படுத்து விட்டார். டாக்டர் வந்தார். டைபாயிட் ஜூரம் என்ருர் அவர். சுதர்சன் வியாதியின் பெயரைக் கேட்டதும் எதையோ எதிர் பார்த்திருப்பவர்போல ஒரு விடிை மலர்ச்சி பெற்றர். ஆம் அவருக்கு உலகம் வெறுத்திருந்தது. ஏனென்ருல் அதில் சாந்தினி மட்டும் இல்லாமலிருந்தாள்! காலம் கடமை கடமை என்று உயிரை விட்டுக் கொண் டிருந்தது. உலகத்திற்குக் கடமையில் அப்படி ஓர் உணர்வு இருப்பதாகத் தெரியவில்லை. மனிதனுக்குத்தான் கடமை என்ற ஒன்று உண்டென்ப. தைப் பற்றிக்கூட ஐயப்பாடுதானே! காலம், உலகம், மனிதன் விசித்திரமான மூன்று வட். டப் புள்ளி மையங்களா? அல்லது விந்தை மிக்க மூன்று துருவங்களா?. ... பதினைந்து நாட்கள் முடிந்தபின், அன்றுதான் சுதர்சன் மெல்லக் கண்களைத் திறந்தார். திறந்த விழிப்பார்வையில் வட்டுவிலகிய புது முகங்களைக் கண்டதும் அவர் உடலில் எப்போ வந்தே மாலினியையும் அழைச்சுக் ' என்ற சொற்கள் அவர் உதடுகளினின்றும்