பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 வெளிப்பட்டன பாதி உயிருடன்: மெல்லிய சன்னமான தொனியுடன். அவருக்கு மேல்மூச்சு வாங்கியது. வெளிறிப் போயிருந்த உதடுகள் மறுபடியும் மூடின. 'தம்பி, உடம்பை அலட்டிக்காதே. நாங்க வந்து ஒரு வாரமாச்சு: நீதான் லெட்டர் கூடப் போடலியே அப்பா, மாலினியும் மாமாவைப் பார்த்தாத்தான் ஆச்சு என்று பிடி வாதம் பிடித்தாள். அழைத்து வந்தேன்...... துரங்கு. பின் ல்ை பேசலாம்...-' என்ருள் மங்களம். பலமுறை தன்னை இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ள தன் சகோதரி எழுதியிருந்த பல கடிதங்கள் அவ. ருக்கு நினைவில் நுழைந் தெழுந்தன. அவர் முகம் மாற்றம் காட்டியது. ‘'எதுக்கு அக்கா இங்கே வரணும்: ஆமாம்; நண்பர்தான் எழுதியிருப்பாரு, அக்காவோடே மாலினியும் வரக் கார ணம்...' திரும்பத் திரும்ப என் மறுமணம் பற்றி நச்சரிப்பு தற்குப் பூடகமான பின் காரணம்-மாலினிதான் காரணத் திற் குரியவளாக'...மேலே அவர் நினைவுச் சங்கிலித் தொடர் சேரவில்லை. ஜுர வேகம் தணிந்து வந்தது. மாலினி அவர் அரு கேயே இருந்துகொண்டு அவரைக் கண்காணித்து வந்தாள்; வேண்டிய பணிவிடைகள் செய்தாள்; இதையெல்லாம் கண்ட சுதர்சனுக்கு மனம் குழம்பி வந்தது. அவளது இத் தகைய சிரத்தைக்குக் காரணம் என்னவா யிருக்கு மென் பதையும் அவர் உணரலானர். வரவர அன்று வந்த தன் தமக்கையின் கடிதங்களின் பொருளையும் இப்போது அவர் புரிந்து கொள்ளலாளுர்; எல்லாவற்றிற்கும் காரணம் மாலினி! அவள் தன் மாமா சுதர்சனுக்கெனக் காத்திருக்கும் கன்னி! இம் முடிவைக் கண்டுபிடிக்க சுதர்சனுக்கு அதிக நேர மாகவில்லை. பெண் உள்ளத்தைப் பல கோணங்களில் ஆரா யும் எழுத்தாளருக்கு இந்த மாலினியின் மனத்தைப் புரிந்து கொள்ளுவதில் வியப்பிற்குரிய தொன்றும் இல்லைதான்,