பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 அறிய எனக்கு எத்தனை மகிழ்ச்சி புரளுகிறது தெரியுமா? அவள்தான் மாலினி; எவ்விதத்திலும் அவள் என் மறுபதிப்பு. அவள் உங்கள் அன்புக்குத் தவங்கிடக்கிருள். அவளே இரண் டாந்தாரமாகக் கலியாணம் செய்து கொண்டால் என் உள் ளம் அமைதிபெறும். இப்படிக்கு அபாக்கியவதி சாத்தினி.’’ மாண்ட தன் மனைவி தன் முன் நேருக்கு நேர் நின்று பணிப்பதாகப்பட்டது சுதர்சனுக்கு. அவர் உடலெங்கனும் ரோமாஞ்சலி கிளர்ந்தது. - - அழுது அழுது வீங்கிக் கிடந்த முகத்துடன் தாயுடன் புறப்படத் தருணம் பார்த்து நின்ற மாலினியிடம் ஒடி அவள் பூங்கரம் பற்றி, மாலினி, இனி நீ என் துணைவி. என் சாந்தினியின் ஆணை; உன் சாந்தினியின் ஆணை...எங்கே ஒரு முறை சிரி...' என்ருர் சுதர்சன் உணர்ச்சி சுழித்திட்ட குரலில். அழகு ரோஜாவாகக் காட்சி தந்தாள் மாலினி! சுதர்சன்-மாலினி திருமணம் நடந்தது. அன்று அவர்களது 'முதல் இரவு. நிலவு சிரித்துக் கொண் டிருந்தது. முகில் கூட்டங்கள் கண்ணுமூச்சி விளையாடின. தென்றல் பூப்பந்தாடியது. இதமான வேளை: இன்பமான் தேரம். வளைகுலுங்கும் நாதம் இழைந்து வந்தது. படியேறிச் சென்ருர் சுதர்சன். அவர் உள்ளம் எம்பிக் குதித்தது. ஆளுல், உள்ளே சென்றதும், அவர் கண்ட காட்சி அவர் தெஞ்சை இறுக்கிச் சாறு பிழியச் செய்தது. அங்கு அழுத கண்ணிருடன் துயர்ம்ே வடிவாக நின்ருள் மாலினி. 伞 岑 米,