பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 தது. செங்கோட அண்ணுச்சி இதை ஒங்க கையிலே குடுத் திட்டு வரச் சொன்னிச்சு; ஒங்க கண்ணுலத்துக்கு எளுத வேண்டிய மொய்க்குப் பதிலாத்தான் இதை அனுப்பியிருக் குது; இந்தாங்க, வச்சுக்கிடுங்க!' என்று வாய்மொழிகளை உதிர்த்தான் வந்த துரதுவன். சோலையப்பன ஜாடை மாடையாக ஒரக் கண் அமைத்துப் பார்த்தபின், பரிசுப் பொருள் பவளக்கொடியின் பூங்கரங்களே அலங்கரித்தது. பவளக்கொடி மண் பொம்மையானுள்; திருமணப் பரிசிலென ஒடோடிவந்த தம்பிக்கோட்டை வீச்சரிவாள்' அவளேக் கண்டும் காணுததுபோல கள்ளப் புன்னகை விடுத்தது! 水 'மருதங்குடி இனிமே எனக்கு விட்டுப்போனுப்பலதான்; எருக்கலக் கோட்டைதான் இனிமேலுக்கு எனக்குச் சதம்!” இந்த ஒர் எண்ணத்தின் அடித்தளத்துடன் ஒட்டி உறவாடி விளையாடிக்கொண்டிருந்தது பவளக்கொடியின் மன உணர்வு. - முகம் நோக்கும் கண்ணுடியில் அவளுடைய அகம் தெரிந்தது. அந்த அகத்தில் அகத்தின் அகமாக ஒர் உருவம் தோன்றியது. கறுக்கு மட்டையின் விளிம்பு போன்ற மீசை, செங்காயாகக் காணப்படுகின்ற தக்காளி யின் மேனி, மிளகாய்ப் பாத்தியின் இடைவெளியில் நெளி நெளியாகப் பரந்தோடிக் கிடக்கும் குறுமணலின் வளைவு கொண்ட சுருட்டை முடி; காவிரி வண்டலில் வளரும் வாழை யின் செழிப்புப் போன்ற உடற்கட்டு. மச்சான்! நீங்களும் நானும் தாராடிசாமி வாய்க்காலடியிலே சுத்தித்திரிஞ்சு வளர்ந்தோம்; நம்ம நேசத்திலே பாசம் கூடி வளர்ந்திச்சு; நான் சமைஞ்ச பொண் ஆனேன்; வந்திச்சு வென; ஓங்க ஆளுக்குப் போட்டியா வந்தானே அந்தச் செங்கோடன்: கள்ளத் தோணியிலே அக்கறைக்குப் பறிஞ்சவன்.கள்ளத் தனமாகவே இங்கனே வந்து குதிக்கப்பிட்டானே!.