பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 பசையோட வந்தான்; ஆளுக்க, பாசி புடிச்ச சொத்து அது!. . ஆத்தாளேச் சொக்குப்பொடி தூவி தன்னக் கட்டிப் புட்டு, என்னையும் வசியப்படுத்தித் தன் சொத்துச் சொகம்ா. ஆக்கிக்கிடப் பார்த்தான். நடந்திச்சா? ம்!. .சொந்த அக்கா மவ உரிமையில்லே கொண்டாடப் பார்த்தாரு அவரு!...பாவிப்பயமவன்!” அழித்தெழுத முடியாத விதியின் எழுத்தை அழித்து எழுத முற்பட்ட செங்கோடன் அன்றைக்குக் கூப்பாடு போட்டான்; உடன் பிறந்த பாசத்துக்குப் பணிந்த பவளக் கொடியின் தாய், அவனது மன விருப்பப்படியே திருவுளச் சீட்டுக் குலுக்கிப் போட்டு, மகமாயியின் ஆக்கினைப் பிர காரமே நடப்பதாக உறுதி மொழிந்தாள். உடுக்குகள் முழங்கின; சூடன் எரிந்தது. செங்கோடன் ஒருபுறம்: இன்னெரு சரணையிலே சோலேயப்பன் இவ்விருவரது ஒட் டாத உள்ளங்களின் நடுவெளியை ஆடுகளமாக நர்த்தனம் புரிந்துகொண்டேயிருந்தாள் பவளக்கொடி. அந்த நர்த்தன வெறியில் கதிகலங்கினர்கள் காதலர்கள் இருவரும். அதே வேளையில், அவளும் நிலை தடுமாறினுள்; சித்தம் குலைந்தாள். மகமாயியின் சந்நிதியில் எழுத்தாணி கொண்டு கிறுக்கப் பட்ட ஒலே நறுக்குகள் இரண்டு குலுக்கிப் போடப்பட்டன: பூசாரி ஒன்றை எடுத்தான். தீர்ப்புப் படிக்கப்பட்டது: செங்கோட அம்பலத்துக்குத்தான் பவளம் சேரோணும்னு ஆத்தா பெரியவ மகமாயி சொல்லிப்புட்டா!' என்ருன் பூசாரி. பனை ஏறி விழுந்தவனே கடா ஏறி மிதித்தமாதிரி சோலையப்பன் துடித்தான்; துவண்டாள் பேதை, துவண்ட வளின் கனவு மீண்ட விந்தை நிகழ்ச்சியை நினைக்க நினைக்க அவளுக்கு அதிசயமாகவே பட்டது. "நான் என் ஆசை மச்சான அடைஞ்ச விதமே மலைப்பாத்தான் இருக்குது. அல்லாம் ஆண்டவன் செயலேதான்!” - ఫి. ※ ஆவளம்.!...” "மச்சானுங்களா?