பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரத்த வெள்ளம்

      • :స్య

புலர்ந்த பொழுதின் கண்களில் மஹேஸ்வரி விழித்தாள். அவளுடைய கண்களில் ‘பெட் காப்பி விழித்தது. மாலே போட்டாற் போன்று கழுத்தைச் சுற்றிக் கிடந்த பட்டுத் துணியைச் செம்மைப்படுத்தியவ்ாறு காப்பியைப் பருகிளுள் அவள். ரேடியோவில் ஒலித்த செய்திகளும் அன்றையச் செய்தித்தாளில் படித்த யுத்த நில்வரங்களும் அவளது நெஞ் சத் தளத்தில் அலை மோதியவாறு இருந்தன. எழுந்து நடந் தாள். ஹாலின் ஒரு பகுதியில் இருந்த பீரோவில் பதித்தி ருந்த கண்ணுடி முன் வந்து நின்ருள்: செக்கச் சிவந்த நெற் றியின் மையத்தில் கறுப்புக் கோடுகளாக மயிரிழைகள் சில சுருண்டு கிடந்தன. அவற்றை ஒதுக்கி விட்டாள். மேலா டையை இழுத்து விட்டுக் கொண்டாள். நெற்றிப் பொட்டு வெகு துலாம்பரமாகப் பொலிந்தது. விண்ணில் பறந்த ஆகாய விமானச் சத்தம் பயங்கர மான ஒலியைக் கிளப்பியது. அவள் சிந்தனே அப்பொழுது, தரைப்படை அதிகாரி யாகப் பணி செய்து கொண்டிருக்கும் தன்னுடைய அன்புத் தமையன் ரமேஷ் பாபுவை நினைவூட்டியது. அண்ணு இன் னும் சற்றைக்கெல்லாம் வந்துவிடக் கூடும் என்ற திட்ட மான ஞாபகமே அவளுக்குப் புதிய தெம்பை வரவழைத்துக் கொடுத்திருக்க வேண்டும். சுவரில் பெரிதாகத் தொங்கிய தன் தந்தையின் படத்தை எட்டி நின்று பார்த்துவிட்டு நடந்தாள். ரமானந்தபாபு காலமாகி வருஷங்கள் சில ஆகி விட்டனவே. துயரத்தின் சாம்பல் துகள்களைத் தட்டிவிட்டு அவள் குஷன் சோபாவில் அமர்ந்தபோது, தாய் தந்தை இழந்த தனக்கு தன்னுடைய அண்ணனே உயிரும் உலகமுமாகத் 5 - .