பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தோன்றி வரும் உண்மையை அவள் வழக்கம் போல எண்ணி ள்ை; வழக்கம் போல மகிழ்ந்தாள்; வழக்கம் போலப் பெரு மைப்படவும் செய்தாள். செய்தித்தாள் மீண்டும் பார்வை யில் விழுந்தது. சீனக்காரனுக்குச் சொல்லிக் கொடுத்த பாடத்தில் பங்கு கேட்டான் பாகிஸ்தான்காரன், பாவம்: பாடம் சொல்லிக் கொடுத்ததை உலக நாடுகள் பூரண மாகப் புரிந்து கொண்டுவிட்டன. ஆனால் இவர்களுக்கு மட் டும் இன்றல்ல, என்றைக்குமே பேராசைப் புத்தி போகாது போலிருக்கிறது. அண்ணன் அடிக்கடி எழுச்சி கொண்டு சூள் உரைக்கிறமாதிரி, நம் பாரதத்தின் மண்ணில் ஒரு துளி யைக் கூட அயலான் எடுக்க விடவே மாட்டோம். . . பரம் பரையாக நாட்டுப் பற்றுக் கொண்ட குடும்பத்தைச் சார்ந்த ரத்தம் அதற்கே உரித்தான இயல்புடன் தன்னுள் பேசிக் கொண்டது. வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. எட்டிப் பார்த்தாள் மஹேஸ்வரி. எஸ். ..எஸ்...அண் ணுவேதான்!.... அண்ணுவோடு கூட...மற்ருெருவர்...யார வர்...? ரமேஷ் பாபு மிகுந்த, மலர்ச்சியுடனும் ராணுவ கம்பீ ரத்துடனும் படி ஏறி வந்து கொண்டிருந்தான். உடன் வந் வதன் இளந்தாடி மீசையுடன் அழகாகத் தோன்றினன். ஆகாய விமானப் படைக்குரிய உடுப்புக்கள் மின்னின. வந்த நண்பன வரவேற்று அமரச் செய்தான் ரமேஷ் 4 Isrld. . -

அண்ணு!” என்று விளித்துக் கொண்டே முத்துச்சுடர் ஒத்தச் சிரித்துக் கொண்டே ஓடி வந்த மஹேஸ்வரி, புதிய விருந்தாளியின் இனிய முகத்தைக் கண்டதும், வரவேற்புப் பண்பு துலங்க கைகளைக் கூப்பி "வணக்கம்!' என்று சொன் ள்ை . - . .

வந்தவனும் பதில் வணக்கம் செலுத்தினன். அவன் ஒரக்கண் அவளை கள்ள விழிப்பார்வை பார்க்கத்தவறவில்லை,