பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71

  • மஹேஸ்வரி! இவர் என்னுடைய புதிய நண்பர்.பெயர் சுந்தர்சிங். பைலட் ஆபீஸராக இருக்கிருர், இப்படிப் பட்ட ஆர்வமிக்க இளைஞர்களால்தான் நம் தாய்த் திருநாட் இடின் கெளரவம், மதிப்பு எல்லாம் திக்கெட்டும் முழங்கி வரு கின்றன . ..இவர்களது தாய் நாட்டுப் பற்றைக் கண்டால் நம் எதிரிகள் அசந்து போய் விடுவார்கள்!”

'ரொம்ப சந்தோஷம். ... ..நம் நாட்டுப் பிரஜைகள் ஒவ் வொருவர் கடமையும் நேரிய முறையில் செயலாற்றப்பட் டால், அப்புறம் நமக்கென்ன கவலே?’ என்று அவள் பதில் மொழிந்து கொண்டிருக்கையில், ரமேஷ் பாபு தன் தோழ னைப் பார்த்து புன்னகை பூத்தவளுக எஸ். ...வி இஸ் மை விஸ்டர்! என் பெற்ருேர்கள் எனக்கு வைத்துச் சென்றிருக் கிற விலை மதிக்க முடியாத சொத்து இவள். பெயர் மஹேஸ் வரி...பி. ஏ. பட்டதாரி, என்று அறிமுகத்தை முடித் தான். சுந்தர்சிங் ஒயிலுடன் இளந்தாடியைத் தடவி விட்டுக் கொண்டான். மஹேஸ்வரி கொண்டுவந்த டியை அருந்தி ன்ை; நன்றி தெரிவித்தான். அவனுடைய சிரிப்பும் பேச் சும், பழகுவதற்கேற்ற நல்ல நண்பன் அவன் என்பதை எடுத்துக் காட்டின. பதன்கோட் முதலிய இடங்களில் யுத்த நிறுத்த ஒப்பந் தத்தை மீறிய வகையில் எதிரிகளின் ஊடுருவல்கள் நிகழ்ந்து வரும் விவரத்தை எச்சரிக்கை செய்தது ஒலிபரப்பி, பார தப் பிரதமர் எதிரிகளுக்கும் எதிரிகளின் உளவாளிகளுக்கும் எச்சரிக்கை விடுத்திருந்த பேச்சும் ஒலித்தது. இரவுப் பொழுது ஊர்ந்தது. ரமேஷ்பாபு வெளியில் போனவன் வரவில்லை. அப்போது சுந்தர்சிங் காரில் வந்து இறங்கி உள்ளே நுழைந்தான். மஹேஸ்வரியுடன் வெகு சகஜமாக உரை பாடி மகிழ்ந்தான், பேச்சுப் போக்கில், ஒரு நாளாவது ஆகாய விமானத்தில் ஏறிப்பார்த்து, சில நிமிஷங்களேனும்