பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பிரயாணம் செய்ய வேண்டுமென்பது என் நீண்ட நாளைய ஆசை!” என்று தன் மனத்தைத் திறந்து காட்டினுள் அவள். அதற்கு அவன், அதற்கென்ன? நாளேக்கே அதற்கு ஏற். பாடு செய்து விடுகிறேன், மஹேஸ்வரி!' என்று குதுரகலத் துடன் கூறினன். அப்போதும், அவளது பருவச் செழிப்பின் எழிலை ரகசியமாகப் பருக அவன் தவறவில்லை. அவள் கொடுத்த சாயாவையும் பருகிளுன் அவன். நாட்டின் நிலை பற்றி இருவரும் பேசினர்கள். - பிறகு அவளிடமிருந்து அவன் விடைபெற்றுப் புறப் பட்ட நேரத்தில் ரமேஷ்பாபு வந்தான். நண்பனிடம் பேசி விட்டு வழியனுப்பி வைத்தான். பிறகு தன் சகோதரியை. தனியே அழைத்து 'மஹேஸ்வரி! நீ நாளைக்கே உன் கண வனுடன் வாழ வேண்டிய குமரிப் பெண். அந்நிய ஆடவர் களுடன் நான் இல்லாத சமயங்களில் பழகுவதை இனி தவிர்த்து விடவேண்டும். இது என் கருத்து. உன்னை நீ விரும்பும் இடத்தில் திருமணம் செய்து கொடுத்து விட வேண்டுமென்பதே என்னுடைய பெருங் கவலையாக இருக்கி றது சகோதரி!” என்று பவ்யமாகத் தெரிவித்தான். அதற்குள் அவள் முகம் சலனம் அடைந்தது. என்ரு லும் அதைப் பெரிதாக்காமல், எப்போதும் போல சகஜ மாகச் சிரித்தபடி, இப்படி வேலி கட்டிப் பேசுகிறீர்களே?... வந்தவர் உங்களுக்கும் சிநேகிதர்! அதுபோல எனக்கும் சினேகிதர்.....நட்புக்காகவே நட்புஎன்ற ரீதியில் அவருடன் நீங்கள் இல்லாத சமயத்தில் பேசியது.தவறு என்று எனக்குத் தோன்ற வில்லை. படித்த பண்பாடுடைய குடும்பம் நம்முடையது என்பதை நான் பரிபூரணமாக அறிந்தவள் தான் அண்ணு: அதே போல, என்னை நானே காத்துக் கொள்ளவும் தவற மாட்டேன். நம் குடும்பத்தின் பரம் பரைப்பேரையும் புகழையும் காத்து வரவும் தவறமாட்டேன் அண்ணு' என்ருள் அவள். பேச்சில் உறுதிதொனித்தது. அவ்வுறுதியே தனக்குக் கிடைத்த நம் பிக்கையாகக் கொண்டு ஆறுதல் பெற்ற ரமேஷ்பாபு இரவு தங்கையுடன்