பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73 உணவு கொண்டான். தமையனின் முகத்தில் நிலவிய அமைதி அவளுக்கு உற்சாகமாக இருந்தது. அடுத்த நாள் அவசரமாக வந்த அழைப்பின் பேரில் அவன் பணிபுரியும் பிரிவைச் சேர்ந்த அலுவலகத்திற்குக் காலையிலேயே கிளம்பி விட்டான் ரமேஷ்பாபு. பகல் கழிந்து இரவு வந்தது. அப்போது இரவு சரியாக எட்டு மணி. அதுவரையில் ரமேஷ்பாபு வீட்டிற்கு வரவில்லை. மஹேஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் மட்டும் தனித்து இருந்தாள். அப்போது அந்த நேரத்தில் அவளைத் தேடிக் கொண்டு பைலட் ஆபீஸர் சுந்தர்சிங் வந்தான். வழக்கம் போல உப சரிப்பு நடந்தது. மஹேஸ்வரி எதிர் ஆசனத்தில் அமர்ந்திருந்தாள். முதல் நாள் இரவு தன் சகோதரன் தன்னிடம் எச்சரிக்கை விடுத்த உபதேசங்கள் அவள் மனத்தில் மீண்டும் எதிரொலித்தன. 'மற்றவர்கள் எப்படியோ?...இவர் தங்கமானவ்ர்!. ...ஒரு நிமிஷம் பழகினால் புரியாதா, என்ன?’ என்று உள்ளுற நினைத் துக் கொண்டாள். - பத்துமணிக்கு விமான கூடத்திலிருந்து ஒரு விமானம் புறப்படவிருப்பதாகவும் அதில் அவள் விருப்பப்படி கொஞ்ச நாழிகை பிரயாணம் செய்து பத்து நிமிடத்தில் கீழே இறங்கி விடலாம் என்றும் அவன் சொன்னன். அவளுக்கு தன் நீண்ட நாளைய ஓர் ஆவல் நிறைவேறப் போவதில் ரொம்பவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. தன் தமை யன் இல்லாத நேரத்தில் எப்படிப் புறப்படுவது? அதுவும் இர வில் என்று சற்றே தயங்கினுள். 'நீங்கள் புறப்படுங்கள், மஹேஸ்வரி. மிஸ்டர் பாபு என்னுடைய ஆருயிர்ச் சிநேகிதர். என்னுடன் வருவதை அவர் ஆதரிக்கவே செய்வார். பத்து நிமிடத்தில் நீங்கள் உங்கள் வீட்டுக்குத் திரும்பிவிட முடியும்' என்று அமைதிப் படுத்தினன்.